News October 22, 2025
சினிமா மூலமே ஜனநாயகனாகி விட முடியாது: கி.வீரமணி

நடிகரின் அரிதாரம், பெரியார் படத்திற்கு மாலை ஆகியவை வெறும் காட்சிகள் தான், அரசியலில் சாதிக்கலாம் என்பது பகற்கனவே என்று விஜய்யை கி.வீரமணி மறைமுகமாக சாடியுள்ளார். சினிமா கவர்ச்சி, பல கோடி ரூபாய் பணம் ஆகியவற்றின் மூலம் உண்மையான ஜனநாயகனாக முடியாது என்றும் விமர்சித்துள்ளார். பிறரிடம் சரணடையாமல் புரிந்துகொண்டு, திருத்திக்கொண்டு அக்கட்சியினர் (தவெக) அரசியல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 22, 2025
தென் தமிழகத்தில் இது முக்கியம்: துருவ் விக்ரம்

சாதி ஒரு பேய் என்று மாரி செல்வராஜ் கூறியிருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக ‘பைசன்’ பட கதாநாயகன் துருவ் விக்ரமிடம் கேட்கப்பட்டது. அதற்கு, மாரி செல்வராஜ் தான் கடந்து வந்த பாதைகளில் இருந்தே படத்தை இயக்குகிறார் என துருவ் தெரிவித்தார். இந்தியா போன்ற ஒரு சமூக கட்டமைப்பு உள்ள நாட்டில், குறிப்பாக தென் தமிழகத்தில் சினிமா உள்ளிட்ட கலை மூலம் சாதி பிரச்னையை வெளிப்படையாக பேசுவது முக்கியம் என்றும் கூறினார்.
News October 22, 2025
விஜய் அரசியலுக்கு அடுத்தடுத்து இடர்களா?

செப்.27-ல் நிகழ்ந்த கரூர் துயரத்திற்கு பிறகு விஜய் வெளியில் தலைகாட்டவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை ஆன்லைன் மூலமே அனுப்பிவிட்டார். 16 நாள்கள் துக்கம், தீபாவளி விடுமுறை என 25 நாள்கள் கடந்துவிட்டன. தற்போது கனமழையும் பெய்ய தொடங்கிவிட்டது. இதனால் விஜய்யின் கரூர் பயணம் மட்டுமல்லாது, அவரது அரசியலுக்கும் அடுத்தடுத்து முட்டுக்கட்டைகள் வருவதாக தவெகவினர் புலம்புகின்றனர்.
News October 22, 2025
BREAKING: இன்று மாலை உருவாகிறது.. கனமழை அலர்ட்

வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என IMD கணித்துள்ளது. இது, வட தமிழகம் – தெற்கு ஆந்திரா இடையே கரையை நோக்கி நகரும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புகள் குறைவு எனவும், அதேநேரம் நிலப்பகுதிக்கு அருகே உள்ளதால் கனமழை பெய்யும் எனவும் IMD தெரிவித்துள்ளது.