News May 28, 2024
முல்லை பெரியாற்றில் அணை கட்டுவதை தடுக்க கோரிக்கை

முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு, விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். புதிய அணை தொடர்பான கேரள அரசின் அறிக்கையை சட்ட விரோதம் என்று அறிவிக்க கோரியுள்ள அவர், புதிய அணை கட்டினால் 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றார். அணை விவகாரத்தில் தமிழக அரசு பொறுப்பை தட்டிக்கழிப்பதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 6, 2026
‘US தாக்கினால் இந்தியாவை குறை சொல்ல முடியாது’

ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு இந்தியாவை குற்றம்சாட்டுவது நியாயமற்றது என்று பாஜக தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார். அவரது X பதிவில், இச்சம்பவம் இந்திய கடற்கரையிலிருந்து சுமார் 250 nautical miles தூரத்தில், சர்வதேச கடலில் நடந்ததாக கூறப்படுகிறது. சர்வதேச கடல் சட்டப்படி அந்த பகுதியில் நடந்த செயல்களுக்கு இந்தியாவுக்கு பொறுப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
News March 6, 2026
BREAKING: கவர்னர் RN ரவி மாற்றம்!

தமிழக கவர்னராக இருந்த RN ரவி மேற்குவங்க கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகருக்கு தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்க ஆளுநராக இருந்த <<19306734>>ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா<<>> செய்த நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
News March 6, 2026
PhonePe-ல் பயோமெட்ரிக் முறை

UPI பேமெண்ட்க்கு பயோமெட்ரிக் முறையை PhonePe அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை PIN மட்டுமே செயல்பாட்டில் இருந்த நிலையில், இனி Fingerprint அல்லது Face recognition வைத்து பேமெண்ட் செய்யலாம். இந்த பயோமெட்ரிக் முறை ₹5000 வரை பரிவர்த்தனைக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. உங்களிடம் PhonePe செயலி இருந்தால் உள்ளே சென்று பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி பாருங்க.


