News October 4, 2025
சாதி பெயரில் இருக்கும் ‘ன்’ விகுதியை நீக்க கோரிக்கை

சாதி பெயரில் இருக்கும் ‘ன்’ விகுதியை எடுத்துவிட்டு ‘ர்’ விகுதியை சேர்க்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத்தின் கொள்கைகள் தமிழர்களின் ரத்தத்தில் கலந்துள்ளதாகவும், கடைசி தமிழன் மூச்சு இருக்கும் வரை, அவர்களின் உயிரில் சுயமரியாதை உணர்வு இருக்கும் வரை, எப்படிப்பட்ட எதிரிகள் வந்தாலும், இந்த இனம் சளைக்காமல் போராடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News October 5, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News October 5, 2025
‘பாகிஸ்தான் நான் பிறந்த நாடு, பாரதம் என் தாய்நாடு’

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த ஒரே இந்து வீரரான டேனிஷ் கனேரியா, இந்திய குடியுரிமைக்கு முயற்சிப்பதாக சர்ச்சை எழுந்தது. அதுபற்றி விளக்கம் அளித்துள்ள அவர், பாகிஸ்தான் நான் பிறந்த நாடாக இருக்கலாம், ஆனால் பாரதம் என் தாய்நாடு. ஆனாலும் இந்தியக் குடியுரிமை பெறும் திட்டம் எனக்கில்லை. என் பேச்சையும் செயல்பாடுகளையும் பார்த்து அப்படி சிலர் கூறுகின்றனர். இது தவறு என்று விளக்கம் அளித்துள்ளார்.
News October 5, 2025
இமயமலைக்கு பறந்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரிஷிகேஷ் ஆசிரமத்தில் அவர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த ஒரு வார கால பயணத்தில், பத்ரிநாத் கோயில், பாபா குகைக்கு அவர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய படங்கள் வெளியாகும் போதும், மன அமைதி தேவைப்படும் போதும் ரஜினிகாந்த் இமயமலை செல்வது வழக்கம்.