News March 1, 2025
போர் விமானங்களின் தேவை அதிகரிப்பு: ஏ.பி. சிங்

இந்தியா ஆண்டுதோறும் 35 முதல் 40 போர் விமானங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் தெரிவித்தார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் 24 தேஜாஸ் விமானங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்திய விமானப்படை (IAF) தனது பழைய விமானங்களை மாற்றுவதற்கு ஆண்டுக்கு குறைந்தது 35 முதல் 40 போர் விமானங்களை உற்பத்தி செய்ய வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2025
LinkedInல் வேலைக்கு அப்ளை பண்றீங்களா.. கவனமா இருங்க!

சைபர் கிரிமினல்கள் வேலை தேடுபவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடுகிறார்கள். LinkedInல் போலி அறிவிப்புகளை வெளியிட்டு, அதில் விண்ணப்பிப்பவர்களிடம் ‘Grass Call’ என்ற ஒரு ஆப்பை Install செய்யும் படி வலியுறுத்துகிறார்கள். இதை டவுன்லோட் செய்தவுடன், யூசரின் தொலைபேசி, கணினி டேட்டா, வங்கி விவரங்கள் போன்ற தகவல்களைத் எளிதில் திருடி விடுகிறார்கள். இனி Apply பண்ணும் போது உஷாரா இருங்க!
News March 1, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் காலை 10 மணி வரை நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி & விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு & மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
News March 1, 2025
ரயில்வேயில் 32,438 காலியிடங்கள்: இன்றே கடைசி

ரயில்வேயில் 32,438 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.1) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயதாக 18ம், அதிகபட்ச வயதாக 36ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேலையில் சேர விரும்புவோர், ரயில்வே ஆள்தேர்வு <