News February 25, 2025
Delimitation: திமுக எதிர்ப்பு ஏன்?

மத்திய அரசு திட்டமிடும் தொகுதி மறுவரையறைக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஏனென்றால், மறுவரையறைக்குப் பின் தமிழகத்தின் லோக் சபா தொகுதிகள் 39இல் இருந்து 31ஆக குறையும். அதேநேரம், உத்தர பிரதேசத்தின் தொகுதிகள் 80இல் இருந்து 143ஆக உயரும். இது தென் மாநிலங்களின் அதிகாரத்தை குறைப்பதாக திமுக குற்றம்சாட்டுகிறது. இதுகுறித்த உங்களது கருத்து என்ன?
Similar News
News March 3, 2026
போரின் கோரமுகம் (PHOTOS)

USA, இஸ்ரேல் – ஈரான் போரால் கடந்த 4 நாள்களிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். குண்டு நம் விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் பிள்ளைகளுடன் பெற்றோர் தவிக்கும் போட்டோக்கள் நெஞ்சை உலுக்குகின்றன. என்ன நடக்கிறது என்று புரியாமல் குழந்தைகள் தங்களது பெற்றோரின் மீது சாய்ந்து விடிவை தேடி காத்திருக்கின்றனர். போரினால் அப்பாவி மக்கள் அல்லாடும் போட்டோக்களை பகிர்ந்துள்ளோம். SWIPE செய்து பாருங்கள்.
News March 3, 2026
+2 மாணவர்களே இதை தெரிஞ்சுக்குங்க!

நேற்று தமிழகம் முழுவதும் +2 பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேர்வு தொடர்பான புகார்களை மாணவர்களும், பெற்றோர்களும் தேர்வுத் துறையின் கவனத்திற்கு கொண்டு வர சென்னையில் ‘தேர்வு கட்டுப்பாட்டு அறை’ அமைக்கப்பட்டுள்ளது. இது காலை 8 மணி – இரவு 8 மணி செயல்படும். 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. SHARE IT..
News March 3, 2026
விஜய்யை கஷ்டப்பட்டு வளர்த்த SAC: ஜெயக்குமார்

பெரிய கோடீஸ்வரர்களின் வீட்டுக்கு மட்டுமே விஜய் செல்வார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எந்த ஒரு ஏழை வீட்டு கல்யாணத்துக்கு விஜய் போயிருக்கிறாரா என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், அவர் பணக்காரர் வீட்டு கல்யாணத்துக்கு தான் போவார் என்று விமர்சித்தார். 7 தயாரிப்பாளர்களை உருவாக்கிய விஜய், தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த தந்தை SAC-ஐ தயாரிப்பாளர் ஆக்காதது ஏன் எனவும் ஜெயக்குமார் கேட்டுள்ளார்.


