News March 31, 2025
டெல்லி பயணம்… செங்கோட்டையன் பதில் இதோ!

‘டெல்லி சென்றீர்களா?, தொடர் மௌனத்திற்கு காரணம் என்ன?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மௌனம் அனைத்தும் நன்மைக்கே என செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், செங்கோட்டையன் தனியாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான், ஒற்றை வரியில் அவர் பதிலளித்துவிட்டு சென்றுள்ளார்.
Similar News
News January 15, 2026
குழந்தைகள் ஓயாம Shorts பார்த்தா இதை பண்ணுங்க!

உங்கள் குழந்தைகள் எந்நேரமும் ரீல்ஸ், ஷார்ட்ஸ் பார்க்கிறார்களா? கவலையை விடுங்கள். உங்களுக்காகவே யூடியூப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, 18 வயதுக்குள் இருப்பவர்கள் எவ்வளவு நேரம் ஷார்ட்ஸ் பார்க்கலாம் என பெற்றோர்கள் டைம்லிமிட் செட் செய்து கொள்ளலாம். தற்போது 15 நிமிடங்கள் – 2 மணி நேரம் வரை டைம்லிமிட் வசதி உள்ள நிலையில், விரைவில் பூஜ்ஜிய நேரத்திற்கான செட்டிங்ஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
News January 15, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 581 ▶குறள்: ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். ▶பொருள்: நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.
News January 15, 2026
‘ஜெயிலர் 2’-ல் ரஜினிக்கு வில்லன் விஜய் சேதுபதியா?

இனி தன்னை ஆச்சரியப்படுத்தும் கதைகளில் மட்டும் தான் வில்லனாக நடிப்பேன் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். வழக்கமான வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க சொல்லி பலர் தன்னை அணுகுவதாகவும், ஆனால், ஒரு வில்லனை ஹீரோவாக புரொமோட் செய்வதில் தனக்கு விருப்பமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ரஜினியை பிடிக்கும் என்பதால் ‘ஜெய்லர் 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


