News May 14, 2024

டெல்லி அணி அபார வெற்றி

image

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 208/4 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அபிஷேக் பொரேல் 58 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய லக்னோ அணி, ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறியது. இறுதியில் அந்த அணி 9 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் அர்ஷத் கான் 58 ரன்கள் எடுத்தார்.

Similar News

News March 14, 2026

மக்கள் நலனை காக்குமா மத்திய அரசு? CM ஸ்டாலின்

image

சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள TN அரசின் அதிகாரங்களுக்கு உட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 3,228 கி.லி. மண்ணெண்ணெய், மின் அடுப்புகளை பயன்படுத்தும் உணவகங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ₹2 மானியம் வழங்கப்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் நலனை காக்க மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 14, 2026

தண்ணீர் கேன் சுத்தமாக இல்லையா? ₹5,000 அபராதம்

image

TN-ல் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், குடிநீர் கேன்களின் தரத்தை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு கேனிலும் விற்பனை நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு & காலாவதி தேதி, FSSAI உரிமம் எண் கட்டாயம் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாசி பிடித்த, அசுத்தமான கேன்களில் தண்ணீர் விற்றால் ₹5,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News March 14, 2026

தேர்தல் கருத்துக்கணிப்பு.. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி

image

லயோலா(IPDS) கருத்துக்கணிப்பில், திமுகவை விட தவெகவுக்கு அதிக வாக்குவங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தவெகவுக்கு 19.20%, திமுகவுக்கு 17.7%, அதிமுகவுக்கு 15.32%, NTK-வுக்கு 6.7% வாக்குவங்கி உள்ளதாம். தேர்தல் நடந்தால் திமுக கூட்டணியில் இருந்து 12%, NDA-வில் இருந்து 8%, NTK-ல் இருந்து 2.5% வாக்குகளை பிரித்து தவெக 22.5% வாக்குகளை பெறுமாம். இது 2 பிரதான அணிகளுக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.

error: Content is protected !!