News March 17, 2024
டெல்லி அணி பேட்டிங் தேர்வு

மகளிர் பிரீமியர் லீக்கில் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. WPL தொடர் பிப்ரவரி 23ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கியது. விறுவிறுப்பாக லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், அரையிறுதி ஆட்டங்களில் டெல்லி, பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றன. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் லேன்னிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
Similar News
News December 7, 2025
வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?

பெடிக்யூர் செய்யும் ஆசை இருந்தாலும், பணம் அதிகமாக செலவாகும் என்பதால் தயங்குறீங்களா? அட, வீட்டிலேயே அருமையாக பெடிக்யூர் செய்துகொள்ளலாம். எலுமிச்சை பழத்தை வெட்டி, அதில் மஞ்சள் பொடி, ஷாம்பூ, பேக்கிங் சோடாவை சேர்த்துக்கொள்ளுங்கள். இதனை உங்கள் பாதங்களில் தேய்த்து வர இறந்த செல்கள் நீங்கி, பளிச்சென்று காட்சியளிக்கும். பார்லருக்கு சென்று செலவு செய்பவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News December 7, 2025
பட்டா, சிட்டா ஆவணம்.. தமிழக அரசு அறிவிப்பு

வீட்டில் இருந்தபடியே பத்திர பதிவு பணிகளை மேற்கொள்ள TN அரசு புதிய திட்டம் கொண்டுவரவுள்ளது. ‘ஸ்டார் 3.0’ திட்டம் மூலம் சொத்துகளை வாங்குவது, விற்பது, திருமண பதிவு உள்ளிட்ட பணிகளை வெறும் 10 நிமிடங்களில் வீட்டில் இருந்தே செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற்கான பிரத்யேக சாப்ட்வேரில் விவரங்களை பதிவு செய்து பத்திரங்களை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
News December 7, 2025
ஜாகீர் கானிடம் இருந்து பிரசித் கற்க வேண்டும்: அஸ்வின்

தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான ODI தொடரில் ரன்களை வாரிக் கொடுக்கும் வள்ளலாக இருந்த பிரசித் கிருஷ்ணாவை பலரும் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் அவர் தனது திறனுக்கு ஏற்ப பந்து வீச அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என அஸ்வின் அறிவுரை வழங்கியுள்ளார். ஜாகீர் கானின் பந்து வீச்சில் இருந்து டெக்னிக்கை பிரசித் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அஸ்வின் அறிவுறுத்தியுள்ளார்.


