News January 24, 2025
டெல்லி: பறக்கும் படை சோதனையில் அதிர்ச்சி

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.20 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 270 உரிமம் இல்லாத ஆயுதங்கள், 44,256 லிட்டர் மதுபானம் மற்றும் ரூ.4.56 கோடி பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த 15 நாட்களில் 504 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News January 5, 2026
பொங்கல் பரிசு… முக்கிய அறிவிப்பு

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொங்கல் பரிசுடன் ₹3000 வழங்கப்படும் என CM ஸ்டாலின் நேற்று அறிவித்துவிட்டார். இப்போது தமிழகம் முழுவதும் டோக்கன் விநியோகம் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்தை வரும் 8-ம் தேதி தொடங்கிவைக்கும் CM, பரிசு தொகையுடன் சேர்த்து பொங்கல் பரிசு தொகுப்பான வேட்டி, சேலை, ஒரு கிலோ பச்சரிசி, வெல்லம், முழு கரும்பு ஆகியவற்றை வழங்குகிறார்.
News January 5, 2026
ஒரு ரேஷன் கார்டு மீது ₹4.54 லட்சம் கடன்: அண்ணாமலை

பொங்கலுக்கு ₹3,000 கொடுத்தால், அனைவரும் திமுகவுக்கு ஓட்டு போட்டுவிடுவார்கள் என அவர்கள் நினைப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். 2021-ல் ஒரு ரேஷன் கார்டு மீது ₹2.04 லட்சமாக இருந்த கடன், இப்போது ₹4.54 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த கடனை நாமும், நமது குழந்தைகளும் தான் கட்ட வேண்டும் எனவும், ஆட்சிக்கு வந்த பின் ₹5 லட்சம் கோடி கடனை திமுக வாங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News January 5, 2026
பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் உரிமம் இத்தனை கோடியா?

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பாலையாவின் பகவந்த் கேசரியின் ரீமேக் என்பது டிரெய்லர் மூலம் உறுதியானது. இதை H வினோத் எப்படி எடுத்திருப்பார் என SM-ல் பெரும் விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் உரிமையை ₹4 கோடிக்கு ‘ஜனநாயகன்’ படக்குழு வாங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பாலையாவின் பார்முலா விஜய்க்கு வொர்க் அவுட் ஆகுமா?


