News March 30, 2025
அதிரடி வீரர்களை சுருட்டிய டெல்லி.. 3பேர் காலி

SRH டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில் முதல் ஓவரிலேயே அபிஷேக் சர்மாவை, விப்ராஜ் ரன் அவுட்டாக்கினார். தொடர்ந்து 3வது ஓவரை ஸ்டார்க் வீச அதில் முதல் பந்தில் இஷான் கிஷனும், 3வது பந்தில் நிதிஷ் ரெட்டியும் ஆட்டம் இழந்தனர். முதல் போட்டியில் அதிரடி காட்டிய SRH, கடந்த போட்டியில் தோல்வி கண்ட நிலையில் இப்போட்டியிலும் தடுமாறி வருகிறது. 3 ஓவரில் 29 ரன்களை SRH எடுத்து விளையாடி வருகிறது.
Similar News
News April 1, 2025
தினமும் உச்சம் தொடும் தங்கம்

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொடுவது நுகர்வோரின் பாக்கெட்டுகளில் பொத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் இன்றும் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வரலாற்று உச்சமாக, இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் $3,147 டாலர்களை தொட்டது. ஆகையால், நாளை காலை சென்னையிலும் தங்கத்தின் விலை உயரும் என்று கணிக்கப்படுகிறது.
News April 1, 2025
பெண் கூட்டு பலாத்காரம்: ஹைதராபாத்தில் கொடூரம்

ஹைதராபாத்தில் ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஹாடிஷரிப் என்ற இடத்தில் லிப்ட் தருவதாக கூறி வாகனத்தில் ஏற்றிய ஒரு கும்பல், நடுவழியில் வைத்து அப்பெண்ணை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.
News April 1, 2025
அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலைக்கு கல்தா?

2026 தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமையலாம் எனத் தகவல் வெளியாகி வருகிறது. அப்படி கூட்டணி அமைந்தால், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிக்கக்கூடாது என அதிமுக விரும்புவதாக சொல்லப்படுகிறது. இதனால் அண்ணாமலையை மாற்றிவிட்டு, அதிமுக தலைமைக்கு நெருக்கமான எல்.முருகன், நயினார் நாகேந்திரன் போன்றவர்களில் யாரேனும் ஒருவரை தலைவராக்க பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.