News November 17, 2024
டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா

டெல்லி ஆம் ஆத்மி மூத்த அமைச்சர் கைலாஷ் கெலாட் திடீரென ராஜினாமா செய்துள்ளார். அதேபோல் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் அவர் விலகியுள்ளார். இதுதொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கட்சி தோல்வி அடைந்து விட்டதாகவும், மக்களுக்கு சேவை என்பதிலிருந்து விலகி அரசியல் நோக்கங்களுக்கு கட்சி திரும்பி உள்ளதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News March 23, 2026
குவாரியில் சடலம்.. திமுக MLA மீது எதிர்கட்சிகள் சந்தேகம்

திண்டுக்கல் நத்தம் அருகே உள்ள கல்குவாரியில் அழுகிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த குவாரி திமுக MLA பழனியாண்டிக்கு தொடர்புடையது என்ற தகவல், இளைஞரின் மரணத்தில் சந்தேகம் எழுப்புவதாக அண்ணாமலை சாடியுள்ளார். அதேபோல், ஏற்கெனவே பத்திரிகையாளரை கடத்திச் சென்று பழனியாண்டி தாக்கியதையும் போலீஸ் கவனத்தில் கொள்ள வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
News March 23, 2026
விஜய்யை எதிர்த்து தேர்தல் மன்னன் பத்மராஜன் போட்டி

சேலத்தைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன், 1988 முதல் இதுவரை 252 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கருணாநிதி, ஜெயலலிதா முதல் முர்மு வரை அனைவருக்கு எதிராகவும் அவர் வேட்புமனுவை அளித்துள்ளார். இதுவரை ₹1.50 கோடி வரை தேர்தலுக்காக செலவிட்டுள்ளதாக கூறும் அவர், மீண்டும் 253-வது முறையாக மேட்டூரில் போட்டியிடவுள்ளாராம். மேலும், விஜய் நிற்கும் தொகுதியில் அவரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளாராம்.
News March 23, 2026
அனைத்து குடும்பங்களுக்கும் ₹10,000.. உறுதி அளித்தார்

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் EPS போடவுள்ள முதல் 3 கையெழுத்தை பற்றி பொள்ளாச்சி ஜெயராமன், பேசியுள்ளார். கோவையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், CM ஆனதும் அனைத்து குடும்பங்களுக்கும் ₹10,000 வழங்கும் ஃபைலில் தான் EPS முதலில் கையெழுத்திடுவார் என உறுதி அளித்துள்ளார். மேலும், மகளிர் உரிமைத் தொகையாக ₹2,000, முதியோர் ஓய்வூதியமாக ₹2000 வழங்கும் ஃபைல்களில் அடுத்ததாக EPS கையெழுத்திடுவார் என தெரிவித்துள்ளார்.


