News March 19, 2024

உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட தலைநகரம் டெல்லி

image

உலகில் அதிக காற்று மாசுயுடைய தலைநகராக டெல்லி இருப்பது தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் IQAir அமைப்பு, 2023ஆம் ஆண்டின் அதிக மாசடைந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா 3வது இடத்தில் உள்ளதென்றும், உலகில் அதிக மாசுயுடைய பெருநகராக பீகாரின் பெகுசராயும், அதிக மாசுயுடைய தலைநகராக டெல்லியும் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது

Similar News

News October 3, 2025

இந்திய அணி முன்னிலை

image

வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. முதல் நாளில் வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்களுக்கு சுருண்ட நிலையில், இந்தியா 2 விக்கெட்கள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-ம் நாள் ஆட்டத்தில், 75 ரன்களை கடந்துள்ள கேஎல் ராகுல் தனது 11-வது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் கில் 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் அடித்துள்ளார். Score – 174/2

News October 3, 2025

சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹3000 குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வரலாறு காணாத உச்சத்தில் இருந்த வெள்ளி விலை இன்று ஒரே நாளில் 1 கிராம் ₹3 குறைந்து ₹161-க்கும், கிலோ வெள்ளி ₹3000 குறைந்து ₹1,61,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாள்களில் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

News October 3, 2025

உலகில் அதிகம் விற்பனையான டாப்-7 மொபைல்கள்

image

புதிதாக வாங்கிய மொபைலை நண்பர்களிடம் காட்டினால், என்னுடையது தான் பெஸ்ட் என்று ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு விவாதிப்பதுண்டு. ஆனால் உங்கள் மொபைல், உலகில் அதிகம் விற்பனையான டாப்-7 மொபைல்கள் பட்டியலில் இருக்கிறதா? இதில் பகிரப்பட்டுள்ள பட்டியலில் சில நாஸ்டாலஜிக் மொபைல்கள் உண்டு. நீங்கள் பயன்படுத்திய மொபைல் இருந்தால் கமெண்ட் பண்ணுங்க..

error: Content is protected !!