News April 30, 2024
டெல்லி காங்கிரஸ் புதிய தலைவர் நியமனம்

டெல்லி காங்கிரஸ் தலைவராகத் தேவேந்திர யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளராக இருக்கும் அவர், இடைக்காலத் தலைவராகச் செயல்படுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இதற்கு முன் தலைவராக இருந்த அரவிந்தர் சிங் லவ்லி, சில நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். அப்போது, காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துத் தொடங்கிய கட்சியுடன் தற்போது கூட்டணி வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
Similar News
News March 28, 2026
ஜான் பாண்டியன் தேர்தலில் இருந்து விலகல்?

அதிமுக கூட்டணியில் தமமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ராஜபாளையம் தொகுதியில் ஜான்பாண்டியன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், திடீர் திருப்பமாக அவரின் மனைவி பிரிசில்லா பாண்டியன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து நெல்லையில் உள்ள அலுவலகத்தில் ஜான்பாண்டியன் ஆலோசனை செய்து வருகிறார். <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
காவ்யா vs அனன்யா.. வெயிட்டிங்கில் ரசிகர்கள்!

SRH மேட்ச் என்றாலே, காவ்யா மாறனை பார்க்கவே ஒரு தனி கூட்டம் உள்ளது. தோற்றால் சோகத்துடன், வென்றால் துள்ளி குதித்து அணியினரை தொடர்ந்து உற்சாக மூட்டும் அவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவருக்கு இந்த சீசனில் அனன்யா பிர்லா பயங்கர டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. RCB-ன் புதிய <<19469065>>Co-ஓனர்<<>> அனன்யாவும் தனது அணியை ஊக்குவிப்பது மட்டுமின்றி ரசிகர்களையும் வசீகரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 28, 2026
மீன்பிடி தடைக்கால நிதி ₹12,000 உயர்த்தப்படும்: டிடிவி

தமிழகத்தின் நிர்வாக வசதிகளுக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என TTV வாக்குறுதி அளித்துள்ளார். *மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கான நிவாரணத் தொகை ₹8000-லிருந்து ₹12,000-ஆக உயர்த்தப்படும் * மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம் ₹2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் * சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான மின் கட்டணம் குறைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். TNElection2026


