News February 16, 2025
டெல்லி நெரிசல்: பயத்தில் பயணிகள்…

டெல்லி ரயில் நிலையத்தில் சமாளிக்க முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் மிரட்சியுடன் தெரிவிக்கின்றனர். கும்பமேளாவுக்காக பிஹாரின் சாப்ராவில் இருந்து ரயில் ஏற வந்த ஒரு பயணி, தாயை இழந்துள்ளார். தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மூச்சுத் திணறி பலர் மயங்கியதாக அந்த பயணி கண்ணீர்விட்டபடி கூறினார். ரயில்கள் தாமதமும் நெரிசலுக்கு காரணம் என்கிறார் மற்றொரு பயணி.
Similar News
News December 5, 2025
திமுகவில் வசைபாடினார்கள்: நாஞ்சில் சம்பத்

6 ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சியிலும் தான் இல்லை என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தவெகவில் இணைந்தபோது, ‘நான் உங்கள் ஃபேன்’ என விஜய் சொன்னதும் மெய்சிலிர்த்து போனதாக நெகிழ்ந்துள்ளார். நாடு முழுவதும் பரப்புரை செய்ய விஜய் தனக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அறிவுத் திருவிழாவில் தன்னை நிராகரித்ததாகவும், திமுகவில் தன்னை வசைபாடியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News December 5, 2025
₹100 கோடி வசூலித்த தனுஷின் ஹிந்தி படம்!

தனுஷ்-ஆனந்த் எல்.ராய் கூட்டணியில் உருவான ‘தேரே இஷ்க் மே’ பாலிவுட் திரைப்படம் நவ.28-ல் வெளியானது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று, வசூலில் கலக்கி வருகிறது. இந்நிலையில், 7 நாட்களில் இந்த படம் ₹118.76 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் தனுஷ் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார்.
News December 5, 2025
அது நில அளவைக் கல், தீபத்தூண் அல்ல: கனிமொழி

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற பாஜகவினர் முயற்சிக்கின்றனர் என கனிமொழி சாடியுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்லில் தீபமேற்ற சொல்கிறார்கள் என குறிப்பிட்ட அவர், மதநல்லிணக்க சூழலை சீர்கெடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், 2014-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்ட படியே வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது என தெரிவித்துள்ளார்.


