News October 7, 2025
டெல்லி CM-ன் பேச்சு வெட்கக்கேடானது: கனிமொழி

அறிவு சுடரை ஏற்றி, மதத்தை பரப்பி, சமூக நலனுக்காக பிராமண சமூகம் பாடுபடுகிறது என்று டெல்லி CM ரேகா குப்தா கூறியிருந்தார். இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட CM சாதியை தூக்கி பிடிப்பது வெட்கக்கேடானது என கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். இந்த சாதிய அடக்குமுறையை ஒழிக்கவே பெரியார் வாழ்நாள் முழுவதும் போராடியதாக தெரிவித்த அவர், மக்களிடையே பிரிவை உருவாக்குவது பாஜக தான் என சாடினார்.
Similar News
News October 8, 2025
திருச்சி: தலைகீழாக கவிழ்ந்த கார்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து வையம்பட்டி அருகே உள்ள கல்பட்டியில் திண்டுக்கல் திருச்சி நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து. திருச்சியை சேர்ந்த ஐந்து பேர் சிறுசிறு காயங்களுடன் உயிர்தப்பினர். அருகில் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டு மணப்பாறை தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 8, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 8, 2025
மோடி முதல்வரான கதை (1/2)

PM மோடி, 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்(அக்.7) குஜராத்தின் CM பதவியை ஏற்றார். சங்கர்சிங் வகேலா, கேசுபாய் படேல் போன்ற தலைவர்கள் கோலோச்சிய குஜராத்தில் மோடி CM பதவியை பிடித்தது எப்படி? 67 ஆக இருந்த பாஜக MLA-க்கள் பலம், 1995-ல் 121 ஆக உயர, குஜராத் அமைப்பு செயலாளரான மோடி ஆதரித்த, கேசுபாய் படேல் முதல்வரானார். சங்கர்சிங் வகேலாவின் கலகத்தை அடுத்து, 2 தரப்புக்கும் பொதுவான சுரேஷ் மேத்தா CM ஆனார்.