News December 16, 2024
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று இது வலுப்பெற்று தமிழகம் நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், உருவாக தாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் அடுத்த 3 நாள்களுக்கு தமிழகத்தில் 3 நாள்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News August 30, 2025
சற்றுமுன்: இன்று ஒரே நாளில் ₹3000 உயர்வு … புதிய உச்சம்

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹3 உயர்ந்து ₹134-க்கும், கிலோ வெள்ளி ₹3000 உயர்ந்து ₹1,34,000-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், கடந்த 20-ம் தேதி ₹73,440-க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் ₹3520 (2 நாளில் மட்டும் ₹1720) அதிகரித்து இன்று ₹76,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News August 30, 2025
ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் கிடையாது: அரசு

குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அரசு ஊழியர்களை ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யும் நடைமுறை இதுவரை பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது என விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் உரிய தேதியில் ஓய்வுபெற அனுமதிக்கப்படுவர். அதேநேரம், விசாரணை முடிவுற்ற பிறகே பணப் பலன்களை பெற முடியும் என்றும் கூறியுள்ளது.
News August 30, 2025
BREAKING: தமிழகத்தில் 3 இடங்களில் CBI ரெய்டு

சென்னையில் மீனம்பாக்கம், பூக்கடை மற்றும் செங்கல்பட்டில் CBI அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தங்க நகை வியாபார முறைகேடுகள் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாகவும், இதில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.