News March 6, 2025

₹1,200 முதியோர் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம்

image

மாநிலத்தில் முதியோர் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. மாதந்தோறும் 10ம் தேதிக்குள் முதியோர் உதவித்தொகை ₹1,200 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், தற்போது மாதக் கடைசி வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிக்கு பலமுறை அலைந்து பணம் பெற வேண்டியிருப்பதால், 10ம் தேதிக்குள் உதவித்தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு முதியோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News March 6, 2025

சாதி பெயர் நீக்கம்.. அரசுக்கு கெடு விதித்த ஐகோர்ட்

image

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான நிலைப்பாட்டை தெரிவிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம் என உயர்நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. சாதிப் பெயரை நீக்குவது குறித்து மார்ச் 14க்குள் விளக்கமளிக்க இறுதி கெடு விதித்த நீதிமன்றம், அரசு விளக்கம் அளித்தாலும், அளிக்காவிட்டாலும் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என திட்டவட்டமாக கூறியுள்ளது.

News March 6, 2025

தொடையில் தங்கம் கடத்தி வந்த நடிகை!

image

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்து கைதான நடிகை ரன்யா ராவ், பல அதிர்ச்சி தகவல்களை கூறி வருகிறார். கடந்த ஓராண்டில் மட்டும் 30 முறை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று, தான் தங்கம் கடத்தி வந்ததாகவும், ஒரு ட்ரிப்புக்கு ரூ.12 லட்சம் வழங்கப்பட்டதாகவும் ரன்யா ராவ் கூறியுள்ளார். மேலும், சந்தேகம் வராமல் இருப்பதற்காக தங்கத்தை தனது தொடையில் ஒட்டி வைத்து எடுத்து வந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

News March 6, 2025

இந்த மாதமே கடைசி: SBI அறிவிப்பு

image

ஸ்டாக் மார்க்கெட், தங்கம் என பல வகை முதலீடுகள் இருந்தாலும், பெரும்பாலான முதலீட்டாளர்களின் ஃபேவரைட் FD என்று சொல்லப்படும் Fixed Depositகள்தான். அவர்களுக்கான, தங்க சுரங்கமான SBI அம்ரித் விருஷ்டி FD திட்டம், மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. 444 நாள்கள் முதிர்வு காலம் கொண்ட இத்திட்டத்தில் 7.25% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் 7.75% வட்டி பெறலாம். SHARE IT

error: Content is protected !!