News March 6, 2025
₹1,200 முதியோர் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம்

மாநிலத்தில் முதியோர் உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. மாதந்தோறும் 10ம் தேதிக்குள் முதியோர் உதவித்தொகை ₹1,200 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், தற்போது மாதக் கடைசி வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிக்கு பலமுறை அலைந்து பணம் பெற வேண்டியிருப்பதால், 10ம் தேதிக்குள் உதவித்தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு முதியோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News March 6, 2025
இயக்குநர் பொன்குமாருக்கு திருமணம்

சினிமா இயக்குநர் பொன்குமாருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஏ.ஆர். முருகதாசிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்து, பிறகு கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவான 1947 ஆகஸ்ட் 16 படத்தின் மூலம் இயக்குநர் ஆனவர் பொன்குமார். அவருக்கும், விவேகா என்பவருக்கும் தென்காசி மாவட்டம் கீழகலங்கலில் உள்ள மாரியம்மன் கோயிலில் வைத்து அண்மையில் மிகவும் எளிய முறையில் திருமணம் நடந்துள்ளது.
News March 6, 2025
பாஜகவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் உதவி: பினராயி

பாஜகவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் மறைமுகமாக உதவுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவை எதிர்க்கும் பிராந்திய கட்சிகளிடம் காங்கிரஸ் திமிர்பிடித்த அணுகுமுறையை கடைபிடிப்பதாகவும், இது அவர்களின் ஆதிக்க மனநிலை இன்னும் மாறவில்லை என்பதையே காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டின் மதச்சார்பற்ற வாக்காளர்கள் எப்படி அவர்களை நம்புவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 6, 2025
தக்காளி விலை கிலோ வெறும் ₹4

தமிழகத்தின் பல இடங்களில் தக்காளி விலை இதுவரை இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. கோவையில் ஒரு கிலோ தக்காளி வெறும் ₹6-க்கு விற்பனையாகிறது. ஆனால், அதைவிட மிக குறைவாக திண்டுக்கலில் வெறும் ₹4-க்கு விற்கப்படுகிறது. அதையும் வாங்க ஆள் இல்லாததால் தக்காளிகளை சாலையோரம் கொட்டி விட்டு, விவசாயிகள் வேதனையுடன் செல்கின்றனர். அதிக விளைச்சல், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை குறைந்துள்ளது.