News July 4, 2024

ரேஷன் கார்டில் பெயர் நீக்க ஒப்புதல் தர தாமதம்?

image

புதிய ரேஷன் கார்டு பெற ஏற்கெனவே உள்ள கார்டில் பெயர் இருக்கக்கூடாது. இதனால், திருமணமானவர்கள் பெற்றோர் கார்டுகளில் இருந்து பெயரை நீக்கி புதிய கார்டுக்கு விண்ணப்பம் செய்வர். ஆனால், பெயர் நீக்கம் கோரினால், ஒப்புதல் தராமல் அதிகாரிகள் தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. ₹1000 உரிமைத்தொகை பெற பெற்றோருடன் ஒரே வீட்டில் வசிப்பவர்கள் கூட புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பதால் இச்சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.

Similar News

News September 22, 2025

அஸ்வ சஞ்சலாசனம் செய்யும் முறை

image

முதுகுத்தண்டு வலுவடைய அஸ்வ சஞ்சலாசனம் செய்து பழகுங்கள் ➤விரிப்பில் நிற்கவும். ஒரு காலை முன்னோக்கி முட்டியை மடக்கியபடி வைக்கவும் ➤மற்றொரு காலை பின்னோக்கி எடுத்து சென்று, கால் முட்டி முதல் கால் விரல்கள் வரை தரையில் இருக்க வேண்டும் ➤கைகளை இடுப்புக்கு பின்புறம் வைக்கவும் ➤இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதே போன்று, காலை மாற்றி செய்யவும். SHARE.

News September 22, 2025

விஜய்யின் கூட்டம் வாக்குகளாக மாறாது: செல்லூர் ராஜு

image

நடிகர்களின் அரசியல் செல்வாக்கை கூட்டத்தை வைத்து மதிப்பிட முடியாது என விஜய் குறித்து செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். சிவாஜி, பாக்யராஜ், டி ராஜேந்தருக்கு கூடிய கூட்டம் இப்போது அட்ரஸே இல்லாமல் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். விஜய் ரசிகர்களைப் பக்குவப்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கூட்டம் வாக்குகளாக மாறாது என்ற கருத்தை நேற்று கமலும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News September 22, 2025

இன்று நவராத்திரி: இவற்றை கண்டிப்பாக பண்ணுங்க!

image

அம்பிகையை வீட்டிற்கு அழைத்து வரும் நவராத்திரி பண்டிகையில், செய்ய வேண்டிய சில காரியங்கள் உள்ளன *எப்போதும் இறை சிந்தனையிலேயே இருந்து, மனதையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் *தியானம், வழிபாடு ஆகியவற்றில் ஈடுபட வேண்டும் *கொலு வைத்தாலும், வைக்காவிட்டாலும் காலை & மாலையில் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும் *முடிந்தவரை உடை, உணவு, பணம் ஆகியவற்றை கொடுத்து உதவலாம். SHARE IT.

error: Content is protected !!