News August 18, 2024
சதுர்த்தசியில் வழிபட வேண்டிய தெய்வம்!

ஆவணி சதுர்த்தசியில் (இன்று) ஆதிசக்தி அம்சமாகிய ஸ்ரீ அதர்வண பத்ரகாளிக்கு விரதமிருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அசுரகுரு சுக்ராச்சாரியார் வழிபட்ட சேலம் உக்ரபிரத்தியங்கிரா கோயிலுக்கு விரதமிருந்துச் சென்று, மிளகாய் அபிஷேகம் செய்து, ரோஜாப்பூ மாலையிட்டு, பூசணி விளக்கேற்றி, வெண்பொங்கல் படையலிட்டு, 108 சக்தி போற்றி சொல்லி வணங்கினால் வேண்டிய வரங்கள் யாவும் கிட்டும் என்பது ஐதீகம்.
Similar News
News January 19, 2026
திவ்யா பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் தமிழ் 9-வது சீசனில், மகுடம் சூடிய திவ்யா கணேசனுக்கு டிராபி வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்ததற்காக அவருக்கு ரூ.50 லட்சம் மற்றும் மாருதி விக்டோரிஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த சீசனில் இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் என மொத்தம் 77 நாட்களுக்கு ரூ.23 லட்சத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. 2-வதாக சபரி, 3-வதாக விக்கல் விக்ரம், 4-வதாக அரோரா ஆகியோர் இடம்பிடித்தனர்.
News January 19, 2026
ஜனவரி 19: வரலாற்றில் இன்று

*1966 – இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். *1983 – நாஜி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டார். *2006 – புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது. * 1855 – ஜி.சுப்பிரமணிய ஐயர், தமிழக இதழியலாளர் பிறந்ததினம். *1990 – இந்திய மதகுரு ஓஷோ மரணம்.
News January 19, 2026
Cinema 360°: ₹11 கோடி வசூலித்த TTT

*ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ 3 நாள்களில் ₹11 கோடி வசூலித்துள்ளதாக தகவல் *சசிகுமார் நடித்துள்ள ‘மை லார்ட்’ டிரெய்லர் இன்று வெளியாகிறது *விக்ரம் பிரபுவின் சிறை ஜன.23-ல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது *ரவி மோகனின் BRO CODE படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்


