News September 22, 2025

டிகிரி போதும்.. ₹64,820 சம்பளத்தில் வேலை!

image

பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 190 Credit Manager & Agriculture Manager காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்து 23- 35 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறுவோருக்கு ₹64,820- ₹93,960 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் அக்டோபர் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

Similar News

News September 22, 2025

டிகிரி போதும்.. ₹64,820 சம்பளத்தில் வேலை

image

SBI வங்கியில் காலியாகவுள்ள 122 மேனேஜர், டெபுடி மேனேஜர், மேனேஜர் (Credit Analyst) உள்ளிட்ட காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: B.E., B.Tech., MBA. வயது வரம்பு: 25 – 35 (சில பதவிகள் மாறுதலுக்கு உட்பட்டது). சம்பளம்: ₹64,820 – ₹1,05,280. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.2. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க

News September 22, 2025

நடிகை ராதிகாவின் தாயார் காலமானார்… இறுதி அஞ்சலி

image

மறைந்த MR ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதாவின் உடல், பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கண்ணீர் மல்க தனது தாயாரை, சகோதரிகள் ராதிகா மற்றும் நிரோஷா உள்பட உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, CM ஸ்டாலின், கி.வீரமணி போன்ற அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கீதா ராதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

News September 22, 2025

மோடி கடைக்கு போய் பொருள் வாங்கட்டும்: மனோ தங்கராஜ்

image

PM மோடி கோட் சூட்டை கழட்டிவிட்டு கடையில் சென்று பொருள்கள் வாங்க வேண்டும், அப்போது தான் விலைவாசி குறித்து தெரிய வரும் என்று மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அடிமாட்டு விலைக்கு க்ரூட் ஆயில் வாங்கிவிட்டு, பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி ஏழைகளின் வயிற்றில் அடிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார். நாங்கள் செய்வது மக்கள் அரசியல், அவர்கள் செய்வது கார்ப்ரேட் அரசியல் என சாடியுள்ளார்.

error: Content is protected !!