News September 17, 2025

டிகிரி போதும்.. மத்திய அரசில் ₹47,600 சம்பளத்தில் வேலை!

image

Union Public Service Commission-ல் காலியாக உள்ள 213 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைக்கேற்ப டிகிரி, சட்டத்தில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும். சம்பள விகிதம்:₹47,600 முதல் ₹1,18,500 வரை. இதற்கு வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்கள்.

Similar News

News September 17, 2025

ரேஷன் பொருள் வாங்க ‘மொபைல் முத்தம்மா’ திட்டம்

image

ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கிட சரியான சில்லறை இல்லாம கஷ்டப்படுறீங்களா? இதற்கு தீர்வு காண ‘மொபைல் முத்தம்மா திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பொருள்கள் வாங்கும் போது ரொக்கமாக செலுத்தாமல், ரேஷன் கடையில் உள்ள QR code-ஐ வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலில் ஸ்கேன் செய்து பணப் பரிவர்த்தனை செய்யலாம். பணம் அரசின் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுவதால் முறைகேடுகளும் தடுக்கப்படும்.

News September 17, 2025

ஜப்பானில் சிக்கிய போலி பாக்., கால்பந்து அணி

image

பாக்.,ஐ சேர்ந்த 22 பேர் அடங்கிய போலி கால்பந்து குழு ஜப்பானில் கொத்தாக சிக்கியுள்ளனர். ‘Golden Football Trial’ என்ற டீம் பெயருடன், 22 பேரும் கால்பந்து வீரர்கள் போல் நடித்து போலியாக கொடுத்த ஆவணத்தின் பின்னணியில், இது மோசடியானது என கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாலிக் வகாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளதாக, பாக்.,ன் FIA விசாரணைக்குழு கூறியுள்ளது.

News September 17, 2025

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் மனு

image

தன்னை பற்றி ஜாய் கிரிஸில்டா அவதூறாக பேசிய வீடியோக்களை நீக்க கோரியும், அவதூறு கருத்துகளை கூற தடை விதிக்க வலியுறுத்தியும் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை HC-ல் மனுதாக்கல் செய்துள்ளார். அதேபோல், இவர் பங்குதாரராக இருக்கும் மாதம்பட்டி தங்கவேலு PVT Ltd நிறுவனத்தையும் தொடர்புபடுத்தி ஜாய் பேசியதால், அந்நிறுவனத்திற்கு 15 நாள்களில் ₹12.5 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!