News August 10, 2025

டிகிரி போதும்… 500 காலியிடங்கள்

image

ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனம்(OICL), அசிஸ்டென்ட் (Class III) பதவிகளில் உள்ள 500 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. குறைந்தபட்ச <>கல்வித்தகுதி<<>>: பட்டப்படிப்பு. வயது 21-30 வயது. சம்பளம்: ₹45,000 வரை. விண்ணப்ப கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ₹850, SC/ST/PWD/EX-SER பிரிவினருக்கு ₹100. விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.08.2025. இணையதளம்: https://www.orientalinsurance.org.in/

Similar News

News August 10, 2025

ராகுல் காந்திக்கு கர்நாடகா EC நோட்டீஸ்

image

வாக்கு திருட்டு நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், அவருக்கு கர்நாடகா தேர்தல் ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி காண்பித்த ஆவணம் தேர்தல் அலுவலர் வழங்கியது இல்லை என கர்நாடக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், ஒருவர் இருமுறை வாக்களித்ததாக கூறும் ராகுல், ஆவணங்களை சமர்ப்பிக்கவும் தேர்தல் ஆணையர் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

News August 10, 2025

ஒரே நேரத்தில் கடலில் இறங்கும் இந்தியா, பாக் படைகள்

image

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் கடற்படைகள், ஒரே நேரத்தில் அரபிக்கடலில் போர்ப் பயிற்சியில் ஈடுபடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 11, 12 தேதிகளில் இருநாட்டு கடற்படைகளும், 60 கடல்மைல் தொலைவில் இப்பயிற்சிகளை மேற்கொள்ளும். ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாக்., எல்லையருகே இந்திய கடற்படை நடத்தும் முதல் பயிற்சி இதுவாகும். எனினும், இது வழக்கமானது தான் எனக் கூறப்படுகிறது.

News August 10, 2025

மாலைநேர உடற்பயிற்சி சிறந்தது: ஏன் தெரியுமா?

image

*காலையில் உடற்பயிற்சி செய்வதைவிட மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. *காலை நேர உடற்பயிற்சி, தசை செல்களை தூண்டி உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. *மாலை நேரத்தில் செய்யப்படும் உடற்பயிற்சியால், உடலின் முழு ஆற்றலும் அதிகரிக்கிறது. *இதனால் நீண்டநேரம் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். மன அழுத்தத்தையும் குறைக்கும்.

error: Content is protected !!