News June 27, 2024
தமிழ்நாட்டில் பாதுகாப்புத்துறை தொழிற்பேட்டைகள்

தமிழ்நாடு, உ.பி.,யில் பாதுகாப்புத்துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகின்றன என்று ஜனாதிபதி முர்மு தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்புத்துறை சார்ந்த ஏற்றுமதிகள் அதிகரித்து வருவதாக பெருமிதத்துடன் கூறிய அவர், ஆயுதம் ஏற்றுமதி செய்யும் உலகின் முதல் 25 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது என்றார். அத்துடன், 2028-29 இல் பாதுகாப்பு ஏற்றுமதி ₹50,000 கோடியை எட்டும் எனவும் தெரிவித்தார்.
Similar News
News March 27, 2026
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது

அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை EPS வெளியிட்டுள்ளார். முதற்கட்டமாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
News March 27, 2026
கம்பேக் கொடுத்தாரா GV.. ‘ஹேப்பி ராஜ்’ Full Review & Rating!

உருவ கேலிக்கு ஆளாகும் அப்பா, ஜார்ஜ் மரியன். அவரை வெறுக்கும் மகன் GV பிரகாஷ், எப்படி காதலில் வென்றார் என்பதே ‘ஹேப்பி ராஜ்’. பலம்: ஜார்ஜ் மரியன் ஒரே ஆளாக படத்தை தாங்குகிறார். GV பிரகாஷ், ஸ்ரீ கெளரி பிரியா, அப்பாஸ் ஓகே. ஒளிப்பதிவு & இசை Neat. காமெடி, எமோஷன் 2-ம் பாதியில் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, கிளைமாக்ஸ் எமோஷன் கலங்க வைக்கிறது. பல்ப்ஸ்: முதல் பாதி கொஞ்சம் போர் அடிக்கிறது. Rating: 2.25/5.
News March 27, 2026
BREAKING: டாஸ்மாக் 4 நாள்கள் விடுமுறை

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி,TN முழுவதும் 4 நாள்கள் டாஸ்மாக் இயங்காது என்று ECI புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 21,22 மற்றும் வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதியும், டாஸ்மாக், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அனைத்து வகையான மதுக்கூடங்களும் மூடப்பட வேண்டும்; இந்த உத்தரவை மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.


