News May 15, 2024
ஊழல் குற்றச்சாட்டில் பாதுகாப்பு துறை இயக்குநர் கைது

ரஷ்ய பாதுகாப்பு துறையில் இயக்குநரக தலைவராக பணியாற்றிவரும் லெப். ஜெனரல் யூரி குஸ்னெட்சோவ். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த பதவி வகித்து வரும் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதன் பேரில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதற்கிடையே அவரது வீடு & தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ₹8 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News November 24, 2025
6.16 கோடி பேருக்கு SIR படிவங்கள்: அர்ச்சனா பட்நாயக்

ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு SIR படிவங்களை அதிகம் வழங்குவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுவரை 6.16 கோடி பேருக்கு நேரடியாக SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் SIR படிவங்களில் பெயர் இருக்கும். மேலும், வரும் டிச.4-க்கு பிறகு SIR பணிகள் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
சற்றுமுன்: விலை புதிய உச்சம் தொட்டது.. மக்கள் அவதி

முருங்கைக்காய் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று முருங்கைக்காய் கிலோவுக்கு ₹100 உயர்ந்து ₹400-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் தக்காளி, கத்தரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் கிலோவுக்கு ₹10 முதல் ₹20 வரை உயர்ந்துள்ளது. மழையால் வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விலை உயர்வால், குடும்ப தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News November 24, 2025
தமிழ்நாட்டில் வாக்களிக்க வெளிமாநிலத்தவர் விருப்பம்

விநியோகம் செய்யப்பட்ட SIR படிவங்களில், 50%-ஐ பூர்த்தி செய்து பெற்றிருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வசிக்கும் வெளிமாநிலத்தவர் 869 பேர் இங்கு வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் படிவம் 8-ஐ நிரப்பி தமிழகத்தின் வாக்காளர்களாக இணையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


