News March 3, 2025
தோல்வி தான் காங்கிரஸை ஈர்க்கும்.. விளாசும் நெட்டிசன்கள்

ரோஹித் குண்டாக இருக்கிறார் என கூறி <<15635681>>காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்<<>> சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இது குறித்த BJPயின் செய்தித் தொடர்பாளரின் பதிவில், டெல்லியில் 90 தேர்தல் சீட் இழப்பது தான் காங்கிரசுக்கு ஈர்ப்பானது என விமர்சித்தார். நெட்டிசன்களும், தொடர் தோல்வி பெறும் காங்கிரசுக்கு, வெற்றி பெறும் கேப்டன் Unimpressive தான் என விமர்சிக்கின்றனர். இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News March 4, 2025
யாருடனும் உங்களை ஒப்பிடாதீர்கள்…

நாம் பொதுவாகவே யாருடனாவது நம்மை ஒப்பிட்டுக்கொள்வோம். நம் கவலைகளில் பாதி, இந்த ஒப்பிடல் மூலம் தான் வரும். உங்களைவிட ஒருவர் வெற்றிகரமாக இருக்கிறார் என்றால் அவருடைய சூழல், குடும்ப வழிகாட்டல்கள் என அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதனால் நீங்கள் ஒன்றும் குறைவானவரில்லை. முதல் படியில் இருந்து நீங்கள் முன்னேறி வருவதற்கு மகிழ்ச்சிக் கொள்ளுங்கள். உங்களாலும் முடியும்!
News March 4, 2025
ஹாஸ்பிடல் விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்

மூச்சுத் திணறல் காரணமாக தயாளு அம்மாள் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்த உடன், முதல்வர் ஸ்டாலின் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாகையில் இருந்து சென்னை திரும்புவதாக சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது. இன்று இரவு சென்னை வந்த உடனே ஹாஸ்பிடலுக்கு நேரில் சென்று தாயாரின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிய இருக்கிறார்.
News March 3, 2025
BREAKING: CM ஸ்டாலின் தாயார் அப்போலோவில் அனுமதி

முதல்வர் ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இரவு திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, வீட்டில் இருந்த உறவினர்கள் உடனே அப்போலோவில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.