News March 24, 2025
பாகிஸ்தான் தினத்திலும் தோல்வி.. கடுப்பில் ரசிகர்கள்!

நியூசிலாந்துக்கு எதிரான 4வது T20Iல் பாகிஸ்தான் 115 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய, அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இன்று பாகிஸ்தான் தினம். அதாவது, பாகிஸ்தானின் முதல் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம். இன்று கூட ஒரு போட்டியை வென்று நாட்டிற்கு கவுரவம் சேர்க்க முடியாதா என ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள். தொடர்ந்து அடிமேல் அடி வாங்கும் பாகிஸ்தானின் நிலைக்கு காரணம் என்ன?
Similar News
News March 25, 2025
அலுமினிய பாத்திரங்களை யூஸ் பண்றீங்களா?

எத்தனை விழிப்புணர்வு கொடுத்தாலும், இன்னமும் பலர் சமையலுக்கு அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் நம் உணவிலும் அதிக அளவிலான அலுமினிய துகள்கள் கலக்கின்றன. இதனை உட்கொள்வதால் நமது நரம்பு மண்டலங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, கேன்சரும் வரக்கூடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், எலும்புகள், கிட்னி, கல்லீரல் ஆகியவற்றிலும் கூட இது பாதிப்பை ஏற்படுத்துமாம். SHARE IT.
News March 25, 2025
வெள்ளியங்கிரியில் பக்தர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் மலையேறிய பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த பக்தர் சிவா, மலையேறி சிவனை தரிசித்துவிட்டு, திரும்புகையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். வெயிலின் தாக்கத்தினாலும், முறையான மலையேறும் பயிற்சி இல்லாததாலும் பக்தர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
News March 25, 2025
அமித் ஷாவை சந்தித்த G.K.வாசன்

டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்தார். கூட்டணி கட்சியான அவர், அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது. இன்று மாலை EPS அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ஜி.கே.வாசனின் சந்திப்பு அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.