News March 18, 2024

”திமுகவுக்கு தோல்வி உறுதி”

image

லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் ரூ.509 கோடி தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றது அம்பலமாகியுள்ளதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். அதிமுக ஆட்சியில் குலுக்கல் சீட்டு, லாட்டரி சீட்டு, ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டது. ஆனால், மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுகவை வரும் தேர்தலில் மக்கள் தோற்கடிப்பார்கள் எனத் தெரிவித்தார்.

Similar News

News April 7, 2025

அன்றே கணித்த மார்க்கெட் வித்தகர்

image

உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டுள்ளதால், பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் முதல் கடைக்கோடி முதலீட்டாளர் வரை முதலீட்டை இழந்துள்ளனர். ஆனால், அமெரிக்காவின் பங்குச்சந்தை புலி, வாரன் பஃபெட் மட்டும் லாபம் ஈட்டியிருக்கிறார். எப்போதும், சந்தை வீழ்ச்சியடையப் போவதை முன்கூட்டியே கண்டறிந்து, முதலீடுகளை பணமாக மாற்றி வைக்கும் அவர், இந்த முறையும் அதேபோல செய்து தப்பித்திருக்கிறார்.

News April 7, 2025

அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கு: நீதிபதி திடீர் விலகல்

image

மூத்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் திடீரென விலகியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில், இந்த வழக்குகளின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை எம்.எம்.சுந்தரேஷ், ராஜேஷ் பிந்தல் அமர்வில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தான் இடம்பெறாத வேறு அமர்வு முன் பட்டியலிட நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

News April 7, 2025

மாநிலங்களவை எம்.பி.யாகும் அண்ணாமலை?

image

தமிழக பாஜக புதியத் தலைவர் யார் என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. புதிய தலைவர் பதவிக்கு எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் பெயர்கள் அடிபடுகின்றன. இந்நிலையில் தற்போதைய தலைவர் அண்ணாமலையின் முக்கியத்துவம் குறையக் கூடாது என கருதும் பாஜக மேலிடம், அவரை மாநிலங்களவை எம்.பி., ஆக்க திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

error: Content is protected !!