News April 22, 2025

பிராமணர்கள் மீதான அவதூறு.. அனுராக் காஷ்யப் மன்னிப்பு

image

‘புலே’ பட விவகாரத்தில், பிராமணர்கள் குறித்து அனுராக் காஷ்யப் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. இதுதொடர்பாக மன்னிப்பு கோரிய அனுராக் தற்போது மீண்டும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். கோபத்தில், ஒருவருக்கு பதிலளிக்கும் போது என் கண்ணியத்தை மறந்துவிட்டதாகவும், முழு பிராமண சமூகத்தைப் பற்றியும் மோசமாகப் பேசிவிட்டதற்கு வருந்துவதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News April 22, 2025

காவிரி தண்ணீர்.. கர்நாடக அரசுக்கு முக்கிய உத்தரவு

image

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடத்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மையின் 39-வது கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.

News April 22, 2025

தீவிரவாத தாக்குதல்… அமித் ஷாவிடம் ஆலோசித்த PM

image

சவுதி அரேபியா சென்றுள்ள PM மோடி <<16180559>>ஜம்மு காஷ்மீர் தாக்குதல்<<>> குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். மக்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சொல்லிய மோடி, அமித் ஷாவை நேரில் சென்று பார்வையிடவும் அறிவுறுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் பலர் காயமடைந்தனர்.

News April 22, 2025

கவலைக்கிடமான நிலையில் உதவி கேட்கும் தமிழ் நடிகர்

image

புற்று நோயால் கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வரும் நடிகர் சூப்பர் குட் <<16171338>>சுப்பிரமணி <<>>மீண்டும் உதவி கேட்டு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று அவர் கோரிக்கை விடுத்த நிலையில், இதுவரை யாரும் உதவி செய்யவில்லை. இந்நிலையில், மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி & வீட்டு வாடகைக்கு பணம் இல்லை. வசதி படைத்த நடிகர்கள் & அரசு தனக்கு உதவ வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!