News February 28, 2025

TV, ஃபிரிட்ஜ்களிலும் வந்த டீப்சீக் AI!

image

சீனாவின் ஹையர், ஹை சென்ஸ், டிசிஎல் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் சாதனங்களில் டீப்சீக் AI டெக்னாலஜியை ஒருங்கிணைத்து வருகின்றன. புதிய மாடல் டிவி, ஃபிரிட்ஜ்கள், ரோபோ வேக்யூம் க்ளீனர்களை தயாரித்து வருகின்றன. நாம் கட்டளையிட்டாலே இந்த கருவிகள் இனி செயல்படும். ஏற்கனவே ஹூவேய், டென்செண்ட் நிறுவனங்களும் தங்கள் கருவிகளில் டீப்சீக் AI வசதியை கொண்டு வருவதாக அறிவித்துள்ளன.

Similar News

News February 28, 2025

சிரியாவில் 1,000 பேர் கொடூர கொலை

image

சிரியாவில் 1,000க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அல் ஆஸாத் அதிபராக (2000-2024) பதவி வகித்தபோது, அவர்கள் கைது செய்யப்பட்டு, டமாஸ்கஸ் ராணுவ விமான நிலைய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அவர்கள் கொடூரமாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர். அங்கு அண்மையில் தோண்டப்பட்ட குழியில் சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

News February 28, 2025

அரசு பஸ்களில் திடீர் கட்டணம் உயர்வு

image

அரசு பஸ் டிக்கெட் கட்டண உயர்த்தப்பட்டது குறித்து அறிவிப்பு வெளியாவது வழக்கம். ஆனால், அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டலத்தால் மதுரையில் இருந்து தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூருக்கு இயக்கப்படும் பஸ்களில் சத்தமின்றி கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. திருச்செந்தூர்- மதுரைக்கு இடைப்பட்ட நிறுத்தங்களுக்கு ரூ.5 முதல் ரூ.9 வரை உயர்த்தப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News February 28, 2025

ஆஸ்திரேலியாவுக்கு 274 ரன்கள் இலக்கு

image

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கு 274 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. லாகூரில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற AFG அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிகபட்சமாக அடல் 85, ஓமர்சாய் 67 ரன்கள் குவித்தனர். AUS அணி தரப்பில், Dwarshuis 3, ஜாம்பா, ஜான்சன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!