News October 22, 2025
மகளின் புகைப்படத்தை வெளியிட்ட தீபிகா படுகோன்

ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதி, தங்களது மகளின் புகைப்படத்தை தீபாவளி ஸ்பெஷலாக பகிர்ந்துள்ளனர். கடந்த 2024 செப்டம்பரில் அந்த நட்சத்திர தம்பதிக்கு குழந்தை பிறந்த நிலையில், தற்போதுதான் முதல்முறையாக மகள் துவா படுகோன் சிங்கை வெளியுலகத்திற்கு காட்டியுள்ளனர். பாரம்பரிய உடையில், மழலை கொஞ்சும் சிரிப்பில் இருக்கும் துவாவிற்கு நெட்டிசன்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.
Similar News
News March 15, 2026
தமிழகம், புதுவை தேர்தல் தேதி.. அதிரடியாக மாறியது

தமிழகம், புதுச்சேரிக்கு கடந்த 30 ஆண்டுகளாக ஒரே நாளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வந்தது. ஆனால், இம்முறை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றம் செய்து வெவ்வேறு தேதிகளில் தேர்தலை நடத்தவுள்ளது. 1996-ல் ஏப்.27-ம் தேதி புதுச்சேரிக்கும், மே 2-ல் தமிழகத்திற்கும் தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு தற்போதுதான் வெவ்வேறு தேதிகளில் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
News March 15, 2026
BREAKING: தமிழகம் முழுவதும் விடுமுறை

TN சட்டப்பேரவை தேர்தல் ஏப்.23-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பொது விடுமுறையாகும். கோடை விடுமுறை என்பதால், பள்ளிகளுக்கு ஏற்கெனவே லீவுதான். கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் ஏப்.23 அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரிக்கு ஏப்.9 அன்று பொது விடுமுறையாகும். மறக்காமல் வாக்களியுங்கள் மக்களே!
News March 15, 2026
நெருங்கும் தேர்தல்.. ₹500 கட்டுகளுக்கு RBI கட்டுப்பாடு

5 மாநில தேர்தல் காரணமாக, பணப்பட்டுவாடாவை தடுக்க ரிசர்வ் வங்கி மூலம் ECI பணிகளை தொடங்கியுள்ளது. அனைத்து வங்கிக் கிளைகளிலும் ₹5 லட்சத்துக்கு மேல் ₹500 கட்டுகள் வழங்கக்கூடாது என RBI வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாம். அதேநேரம், ₹200, ₹100 நோட்டுகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் போடவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.


