News September 30, 2025
அதிகம் தேடப்பட்ட தீபிகா!

நடிகர்கள் மட்டும் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் சினிமா உலகில், நடிகை தீபிகா படுகோனே சாதனை படைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் அதிகம் தேடப்பட்ட இந்திய சினிமா நட்சத்திரங்கள் பட்டியலில் தீபிகா படுகோனே முதலிடத்தில் இருப்பதாக IMDB தெரிவித்துள்ளது. இதனை, ஜனவரி 2014 – ஏப்ரல் 2024 வரையில் உள்ள வாராந்திர தரவரிசையின் அடிப்படையில், IMDB தெரிவித்துள்ளது. ஷாருக் கான் 2ஆவது இடத்தில் உள்ளார்.
Similar News
News March 17, 2026
54 வாக்குச் சாவடிகளில் தொடர் கண்காணிப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான அனனத்து கட்சி அரசியல் பிரதிநிதிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பேசியபோது, “திருவாரூர் மாவட்டத்தில் 54 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை எனக் கண்டறியப்பட்டு, தொடர் கண்காணிப்பில் உள்ளது. மேலும் 4 கம்பெனி துணை ராணுவத்தினர் வருகை தர உள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.
News March 17, 2026
BREAKING: தங்கம் விலை மேலும் சரிவு!

தங்கம் விலை இன்று(மார்ச் 17) சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹60 குறைந்து ₹14,650-க்கும், 8 கிராம் கொண்ட சவரன் ₹1,17,200-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவால் இந்திய சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து 6-வது நாளாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 17, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <


