News August 3, 2024
காலிறுதிக்கு முன்னேறினார் தீபிகா

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனி வீராங்கனை மிக்சல் க்ரோப்பனை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அவர் அசத்தியுள்ளார். தொடர்ந்து, மகளிர் ஒற்றையர் வில்வித்தை காலிறுதி போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.
Similar News
News December 14, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 14, கார்த்திகை 28 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 AM – 4:30 AM ▶திதி: தசமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News December 14, 2025
கேரளா உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக படுதோல்வி

கேரளா உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட திமுக, அதிமுக ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. உப்புதரா – 9, சின்னக்கானல் – 3, தேவிகுளம் – 1, மறையூர் – 1, தேவிகுளம் – 1 என 15 இடங்களில் திமுகவும், இடுக்கி-19, பாலக்காடு – 4, திருவனந்தபுரத்தில் – 2 என 25 இடங்களில் அதிமுகவும் போட்டியிட்டு இருந்தன. அங்குள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 4-ல் வெற்றி பெற்றுள்ளன.
News December 14, 2025
பூரண மதுவிலக்கு தோல்வி அடைந்த திட்டம்: MP கார்த்தி

குஜராத்தில் பூரண மதுவிலக்கு என்பது காகிதத்தில் இருக்கிறதே தவிர, காந்தி பிறந்த போர்பந்தரில் தான் அதிகப்படியான மது இறக்குமதியாவதாக கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். பூரண மதுவிலக்கு என்பது உலகெங்கும் தோல்வியடைந்த திட்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, மதுபயன்பாட்டை கட்டுப்படுத்தலாமே தவிர, பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?


