News March 28, 2024

முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்

image

ஈரோடு எம்.பி கணேசமூர்த்தியின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர் கணேசமூர்த்தி என்பதை நினைவுகூர்ந்த முதல்வர், அவரது மறைவு செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக உருக்கமாக கூறியுள்ளார். மேலும், அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 8, 2026

நாமக்கல்லில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnmkdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News January 8, 2026

அனில் அகர்வால் மகன் காலமானார்.. மோடி இரங்கல்

image

பிரபல தொழில் அதிபரான அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ்(49) அகால மரணம் மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தனது X பதிவில், <<18794350>>அனில் அகர்வாலின்<<>> பதிவை பகிர்ந்து, உங்களது உருக்கமான அஞ்சலியில் துயரத்தின் ஆழம் தெளிவாகத் தெரிகிறது. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் வலிமையும் தைரியமும் பெற பிரார்த்திப்பதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

News January 8, 2026

BREAKING: இபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த அமித்ஷா

image

டெல்லியில் நேற்று இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, ஆட்சியில் பாஜகவுக்கு பங்கு தர வேண்டும் எனக் கூறி EPS-க்கு அமித்ஷா அதிர்ச்சி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக, அதன் கூட்டணி கட்சிகளுக்கு (TTV, OPS, G.K.வாசன்+) 56 தொகுதிகள் மற்றும் அமைச்சரவையில் 3 இடங்களை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என அமித்ஷா கூறினாராம். இதை கேட்டு அதிர்ந்த EPS, அந்த கோரிக்கையை உடனே நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!