News October 5, 2025
ஆயுள் வளர்க்கும் ஆழ்ந்த சுவாசம்!

உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் செயல்முறைகளில் ஒன்று ஆழ்ந்த மூச்சுவிடுதல். ஆழ்ந்த மூச்சுவிடும் போது ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது, படபடப்பு குறைகிறது. மேலும், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் குறைவதுடன், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கிறது. அதே போல, இது நுரையீரலுக்கு பயிற்சியாக அமைவதுடன், உடல், மன ஆற்றல்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்துகிறது. SHARE.
Similar News
News October 5, 2025
கரூர் விவகாரம்: இன்றே விசாரணையை தொடங்கும் SIT

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நீதிமன்றம் அமைத்திருந்தது. இந்நிலையில், வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க், நாமக்கல் எஸ்பி விமலா, எஸ்பி சியாமளாதேவி ஆகியோர் இடம்பெற்றுள்ள இக்குழு கரூருக்கு விரைந்துள்ளது. இன்றே விசாரணையை தொடங்கும் இவர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் பேசுவதோடு, சிசிடிவிகளை ஆராயவும் திட்டமிட்டுள்ளனர்.
News October 5, 2025
பிரபல நடிகை காலமானார்.. திரையுலகம் கண்ணீர் அஞ்சலி

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை சந்தியா சாந்தாராம் (94) நேற்று காலமானார். அவரது உடலுக்கு திரைத்துறையினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சந்தியா சாந்தாராமின் மறைவால் வேதனையடைந்தேன்; அவரது நடிப்பும், மயக்கும் நடனமும் சினிமா உலகில் ஒரு அழியாத முத்திரை என இயக்குநர் மதுர் பண்டார்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல், மகாராஷ்டிரா CM ஃபட்னாவிஸ் உருக்கமாக தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.
News October 5, 2025
தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல்!

காசாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் ராணுவம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக USA அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பணயக்கைதிகள் விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டவுடன், அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் தாமதமாக்கினால் பொறுத்துக்கொள்ள மாட்டேன் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், போரை முழுமையாக நிறுத்துவதற்கான அடுத்தகட்ட திட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.