News February 11, 2025
இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738902885318_785-normal-WIFI.webp)
TN முழுவதும் தைப்பூச நாளான இன்று அரசு விடுமுறை என்றாலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களது அசையா சொத்துகளை மங்களகரமான நாளில் பதிவு செய்ய விரும்புவதால் இன்றைய தினம் ஆவணப் பதிவுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக காலை 10 மணி முதல் பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும். ஆனால், விடுமுறை நாளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.
Similar News
News February 11, 2025
Open AI-க்கு ₹8.46 லட்சம் கோடி ஆஃபர் அறிவித்த மஸ்க்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739251239181_1173-normal-WIFI.webp)
Open AI நிறுவனத்தை ₹8.46 லட்சம் கோடிக்கு வாங்க எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், இதில் துளியும் விருப்பமில்லாத அந்நிறுவனத்தின் CEO அல்ட்மேன், மஸ்க்கிற்கு ஓகே என்றால் இதே விலைக்கு, அவரது X நிறுவனத்தை வாங்க தயாராக இருப்பதாக பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 2015ல் Open AI நிறுவனத்தை மஸ்க், அல்ட்மேன் இணைந்து உருவாக்கியதும், பின்னர் கருத்து முரண்களால் மஸ்க் வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.
News February 11, 2025
BREAKING: சீட் பிடிப்பதில் சண்டை: மாணவன் உயிரிழப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739258497078_55-normal-WIFI.webp)
தனியார் பள்ளி வாகனத்தில் சீட் பிடிப்பது தொடர்பாக மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்தான். சேலம் எடப்பாடியில், நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்ப வாகனத்தில் ஏறிய மாணவர்கள், சீட் பிடிக்க சண்டையிட்டுள்ளனர். அப்போது ஒரு மாணவன் எட்டி உதைத்ததில், மார்பில் காயமடைந்த 9-ம் வகுப்பு மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனால், பாதுகாப்பு கருதி, பள்ளி முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
News February 11, 2025
கங்குலியை முந்திய ரோஹித் ஷர்மா
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739253605313_1173-normal-WIFI.webp)
இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு, அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் வெற்றிகளைக் குவித்தவர்களின் பட்டியலில், 98 வெற்றிகளுடன் ரோஹித் ஷர்மா 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 179 வெற்றிகளுடன் தோனி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 137 வெற்றிகளுடன் கோலி 2ஆம் இடத்திலும், 104 வெற்றிகளுடன் முகமது அசாருதீன் 3ஆம் இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் கங்குலி (97) 5ஆவது இடத்தில் உள்ளார்.