News June 26, 2024
நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறதா?

காலநிலை மாற்றத்தால், பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பது அவசியமாகிறது. குறிப்பாக, சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய பழங்களையும், உருளைக்கிழங்கு, குடை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளையும் அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News March 2, 2026
LNG உற்பத்தியை நிறுத்திய கத்தார்.. விலை உயர வாய்ப்பு

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு(LNG) ஆலையான ராஸ் லஃபான் தொழில்துறை நகரத்தை ஈரான் தாக்கியுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக LNG உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக கத்தார் எரிசக்தி துறை அறிவித்துள்ளது. உலகின் 20% LNG உற்பத்தி கத்தாரிடம் இருப்பதால், அதன் விலை சர்வதேச அளவில் உயர வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
News March 2, 2026
கூட்டணியில் இருந்து விலகினார்.. இபிஎஸ் ஷாக்

பாஜக, அதனுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது. EPS-ஐ சந்தித்து அதிமுகவுடன் கூட்டணி என அக்கட்சியின் மாநில செயலாளர் கதிரவன் அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரை தற்காலிக சஸ்பெண்ட் செய்ததுடன், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தேவராஜன் அறிவித்துள்ளார். இதனால் EPS மற்றும் அதிமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
News March 2, 2026
ஈரானின் தாக்குதலுக்கு மோடி கண்டனம்

போர் நடைபெறும் பஹ்ரைன், சவுதி நாட்டு தலைவர்களுடன் PM மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இதனையடுத்து பஹ்ரைன் மற்றும் சவுதி மீதான தாக்குதலை கண்டிப்பதாக X தளத்தில் பதிவிட்டுள்ள PM, இந்தியா அவர்களுக்கு துணை நிற்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியர்களுக்கு தேவையான நடவடிக்கை எடுத்த அவர்களுக்கு மோடி நன்றியும் தெரிவித்துள்ளார்.


