News September 6, 2025

குறையும் பிறப்பு விகிதம்… தமிழகத்துக்கு வார்னிங்!

image

நாட்டிலேயே தமிழகத்தில் தான் குழந்தை பிறப்பு விகிதம்(CBR) மிகக் குறைவாக உள்ளதாக CSR அறிக்கை தெரிவிக்கிறது. 1000 பேருக்கு 12 என்ற அளவிலேயே தமிழகத்தில் CBR இருக்கையில், தேசிய அளவில் இது 18.4 ஆகவுள்ளது. மேலும், <<15668950>>மொத்த கருவுறுதல் விகிதமும்<<>> (TFR) தமிழகத்தில் 1.3 ஆகவுள்ளது. ஆனால், TFR குறைந்தது 2.1 ஆக இருந்தால் தான் மக்கள்தொகை சரியாமல் இருக்கும். TN மக்கள்தொகை குறைவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

Similar News

News September 6, 2025

தருமபுரி மாணவர்கள் கவனத்திற்கு

image

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) வரும் 08.09.2025 அன்று தருமபுரி (கடகத்தூர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

News September 6, 2025

BREAKING: அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கம்

image

<<17629139>>செங்கோட்டையனை<<>> தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சிலரையும் கூண்டோடு நீக்கி EPS அறிவித்துள்ளார். நம்பியூர் வடக்கு ஒ.செ.,(ஒன்றிய செயலாளர்) சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒ.செ., ஈஸ்வரமூர்த்தி, கோபி மேற்கு ஒ.செ., குறிஞ்சிநாதன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்தியூர் வடக்கு ஒ.செ., தேவராஜ், அத்தாணி ரமேஷ், ஈரோடு மண்டல IT விங் துணை செயலாளர் மோகன்குமார் ஆகியோரும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

News September 6, 2025

அல்காரஸின் வேகத்தில் வீழ்த்த நட்சத்திர வீரர் ஜோகோவிச்

image

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அல்காரஸ்(22), ஜோகோவிச்சை எதிர்கொண்டார். இதில் 38 வயதாகும் ஜோகோவிச், அல்காரஸின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார். அதனால் 6-4, 7-6, 6-2 என்ற கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்றார். 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை மீண்டும் ஜோகோவிச் தவறவிட்டார்.

error: Content is protected !!