News July 25, 2024
சரிவு பாதிப்பை ஏற்படுத்தாது: வல்லுநர்கள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு (₹83.72) இன்று சரிந்தது. இச்சரிவு இந்தியா பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பேசிய தலைமைப் பொருளாதார ஆலோசகர், டாலர்களில் கடன் வாங்கியிருந்தால் பணத்தின் மதிப்பு குறைவது பிரச்னையை ஏற்படுத்தியிருக்கும் என்றும் வெளிநாட்டுக் கடன் குறைவாகவே இருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறினார்.
Similar News
News March 13, 2026
56 வயதில் 22 மனைவிகள்.. பலே ஆசாமி

கேரளாவில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட பாகுலேயன்(56) என்பவர் போலீசிடம் சிக்கியபோது, அவர் 22 பெண்களை திருமணம் செய்து மோசடி மன்னனாக வாழ்ந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவரை திருமணம் செய்திருந்த பாகுலேயன், மனைவிகளுக்கு நகை வாங்கி கொடுத்து திருப்திப்படுத்த திருட்டில் ஈடுபட்டராம். பல பெயர்களில் பல பெண்களை ஏமாற்றி அவர் திருமணம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இவரை என்ன சொல்வது?
News March 13, 2026
84 ஈரானிய மாலுமிகளின் உடல்கள் ஒப்படைப்பு

இந்திய பெருங்கடலில் சென்ற <<19303157>> ஈரான் போர் கப்பலை<<>> அமெரிக்கா தாக்கி மூழ்கடித்தது. இதில் 84 மாலுமிகள் உயிரிழந்த நிலையில், 32 பேர் இலங்கை கடற்படையால் பத்திரமாக மீட்கப்பட்டனர். 60 பேரின் நிலை பற்றி இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் 84 பேரின் உடல்களை ஈரான் தூதரகத்திடம் இலங்கை ஒப்படைத்துள்ளது. சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களின் உடல்கள் ஈரான் கொண்டு செல்லப்பட உள்ளன.
News March 13, 2026
கனிமொழியை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி: EPS

தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சிறுமியின் உறவினர்கள் திமுகவின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என EPS சாடியுள்ளார். <<19370719>>கனிமொழியை <<>> அச்சிறுமியின் உறவினர்கள் விரட்டி அனுப்பியதே இதற்கு சாட்சி எனவும் கூறியுள்ளார். பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய திமுக அரசுக்கு முடிவுரை கட்டப் போகும் மாபெரும் <<19364920>>போராட்டத்தை <<>> NDA கூட்டணி நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


