News April 14, 2024
இஸ்ரேலுக்கு விமான சேவைகளை நிறுத்த முடிவு?

இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-காஸா போர் பதற்றம் நீடிக்கும் சூழலில், தற்போது ஈரானும் இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அங்கு அசாதாரணமான சூழல் நிலவிவரும் நிலையில், இஸ்ரேல் வான்வழிப் பாதையை தவிர்க்கவும் விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
Similar News
News December 1, 2025
திருவள்ளூர்: காதல் திருமணம்-மாப்பிளையை பொளந்த பெற்றோர்!

அரக்கோணத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் முடித்து திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த மணமகனின் தாயார், மாற்று சமூகப் பெண்ணை மணந்த ஆத்திரத்தில், மனைவியின் கண்முன்னே மகனை சரமாரியாகத் தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இருதரப்பையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
News December 1, 2025
பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்கும் தவெக: உதயநிதி

செங்கோட்டையன் கட்சி மாறவில்லை. ஒரு கட்சியின் வேறு ஒரு கிளைக்கு தாவியுள்ளார் என உதயநிதி விமர்சித்துள்ளார். இதனால், தவெக ஒரு சுதந்திரமான கட்சி இல்லை என்ற அவர், பாஜகவின் கட்டுப்பாட்டில் அது இயங்குகிறது என அவர் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், அமித்ஷாவின் ஆலோசனைப்படியே செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
போட்டோவை காணிக்கையாக கேட்கும் அம்மன்!

பொங்கல் வைப்பது, முடி, பண காணிக்கை போன்றவற்றை காணிக்கையாக செலுத்தும் பல கோயில்கள் உள்ளன. ஆனால், வேலூர் ஆற்காடு அருகே உள்ள கலவை என்னும் கிராமத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் முற்றிலும் மாறுபட்டதாகும். எந்த வேண்டுதல் ஆயினும் அது நிறைவேறிய பிறகு, தங்களது போட்டோவை காணிக்கையாக கோயிலில் மாட்டிவிட்டு செல்கின்றனர். அதே போல, இக்கோயிலில் பூசாரியும் இல்லை. அர்ச்சனை, அபிஷேகமும் நடப்பதில்லை.


