News September 18, 2025
சட்டசபையில் வெளியான 256 அறிவிப்புகளை கைவிட முடிவு

புதைவட கேபிள்களாக மாற்றும் திட்டம் உள்ளிட்ட சட்டசபையில் அறிவிக்கப்பட்ட 256 அறிவிப்புகளை, செயல்படுத்த சாத்தியமில்லை என்பதால் அதை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உயரதிகாரிகள் கூறும்போது, 2021-ல் புதிய அரசு பொறுப்பேற்ற பின், இதுவரை வெளியான 8,634 அறிவிப்புகளில், 4,516 அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 3,455 அறிவிப்புகள் தொடர்பான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 5, 2026
விஜய்யின் திமுக எதிர்ப்பை பாராட்டுகிறேன்: தமிழிசை

திமுகவை விரட்ட வேண்டும் என்பது மட்டுமே தங்களின் குறிக்கோள் என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். திமுகவின் தவறுகளையும், நீட் விலக்கு, கேஸ் மானியம் உள்ளிட்ட திமுகவின் பொய் வாக்குறுதிகளை விஜய் தெளிவாக எடுத்துச் சொல்வதாகவும், அவரது திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை தான் பாராட்டுவதாகவும், மற்றபடி திமுக – அதிமுக டீலிங் என்று விஜய் விளையாட்டாக பேசி வருவதாக குறிப்பிட்டார்.
News March 5, 2026
நகைக் கடன்.. முக்கிய அப்டேட்

நகைக் கடன் பெற முயற்சிப்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த செய்தி. குறைந்த வட்டியில் கடன் பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (8.05 – 8.55%), இந்தியன் ஓவர்சீஸ் (8.20%), PNB (8.35 – 9.25%), SBI (8.70 – 9%), கனரா (8.75 – 9.25%) ஆகியவே குறைந்த வட்டி விகிதத்தில் நகைக் கடன் வழங்கி வருகின்றன. இதில், ஏதேனும் ஒன்று தேர்வு செய்து கடன் பெற்றால் வட்டி சுமை குறையும். SHARE
News March 5, 2026
கமேனி கொலை: இந்தியா மௌனம் கலைத்தது

ஈரான் உச்ச தலைவர் கமேனியின் மறைவுக்கு இந்தியா பல நாள்கள் கழித்து இரங்கல் தெரிவித்துள்ளது. முன்னதாக, கமேனி கொல்லப்பட்டதை உலக நாடுகள் வன்மையாக கண்டிக்க வேண்டும் எனவும், ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், மௌனம் கலைத்த இந்தியா, இந்த இக்கட்டான நேரத்தில் ஈரான் மக்களுடன் துணை நிற்பதாக தெரிவித்துள்ளது.


