News February 26, 2025

2026இல் 10,000 பிளாக் ஸ்பாட்டுகளை நீக்க முடிவு

image

NH-ல் 10,000 பிளாக் ஸ்பாட்டுகளை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதிக விபத்துகள் நடைபெறும் இடங்கள் குறித்து வாகன ஓட்டிகளை எச்சரிக்க பிளாக் ஸ்பாட் வைக்கப்பட்டு இருக்கும். இந்நிலையில், விபத்துக்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை கவனத்தில் காெண்டு, 2026ல் 10,000 பிளாக் ஸ்பாட்டுகளை நீக்க மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Similar News

News February 26, 2025

விஜய் ரசிகரை கலாய்த்த ஜோதிகா

image

பொதுவாக திரைப் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுக்கு ரிப்ளை செய்வதில்லை. அப்படி, என்றாவது ஒருநாள் செய்யும் ரிப்ளை ‘நச்’சென தலையில் அடித்தது போல இருக்கும். அப்படி ஒரு ரிப்ளையைதான் நடிகை ஜோதிகா செய்துள்ளார். “உங்கள் கணவரை விட தளபதி சூப்பர்” என்று விஜய் ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்ய, சிரிப்பு ஸ்மைலியை போட்டு சத்தமில்லாமல் கலாய்த்துவிட்டார் ஜோதிகா.

News February 26, 2025

ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தோனி

image

ஒவ்வொரு ஆண்டும் தோனிக்கு அதுதான் கடைசி ஐபிஎல் என்று ஒரு கும்பல் சொல்ல, அதனை பொய்யாக்கி மீண்டும் மீண்டும் அவர் விளையாடி வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் அணிந்திருக்கும் டி-சர்ட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், <<15589856>>மோர்ஸ் codeஇல் ‘One Last Time’ என எழுதப்பட்டுள்ளது<<>>. இதனால், தோனிக்கு இதுதான் கடைசி IPLஆக இருக்குமோ என்று அவரது ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

News February 26, 2025

எம்.பி. ஆகும் கெஜ்ரிவால்?

image

மாநிலங்களவை எம்.பி.ஆக கெஜ்ரிவால் தேர்வு செய்யப்படக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி தேர்தலில் வென்று மீண்டும் முதல்வராக அவர் நினைத்து இருந்தார். ஆனால் AAP தோற்றதால், மாநிலங்களவை எம்.பி.ஆக அவர் திட்டமிட்டுள்ளார். மாநிலங்களவை AAP எம்பி சஞ்சீவ் அரோராவை, லூதியானா இடைத்தேர்தல் வேட்பாளராக AAP அறிவித்துள்ளது. இதனால் காலியாகும் இடத்தில் கெஜ்ரிவால் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

error: Content is protected !!