News June 19, 2024
விஜய் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு

நடிகர் விஜய் ஜூன் 22இல் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். தவெக கட்சி தொடங்கிய பின் அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பல நலத்திட்ட உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அன்னதானம், ஊனமுற்றவர்களுக்கு சைக்கிள், பெண்களுக்கு தையல் மிஷின் வழங்க திட்டமிட்டுள்ளார்களாம்.
Similar News
News April 3, 2026
அடுத்தடுத்து விலகினர்.. டிடிவி தினகரன் அதிர்ச்சி

TTV மீது அதிருப்தியடைந்த 2 EX MLA-க்கள் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். ராணிப்பேட்டை மா.செ.,வும் சோளிங்கர் EX MLA-வுமான பார்த்திபன், செங்கல்பட்டு மா.செ.,வும் திருப்போரூர் EX MLA-வுமான தண்டபாணி இந்த தேர்தலில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், அவர்கள் விரும்பிய தொகுதிகளை EPS-யிடம் TTV கேட்டு பெறவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்த அவர்கள் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.
News April 3, 2026
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது

2026 தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சாத்தூர் – நயினார், கோவை வடக்கு – வானதி, மயிலாப்பூர் – தமிழிசை, அவிநாசி – எல்.முருகன், விளவங்கோடு – விஜயதரணி, மதுரை தெற்கு – ராம சீனிவாசன், திருச்செந்தூர் – ராதாகிருஷ்ணன், திருவண்ணாமலை – ஏழுமலை, ராசிபுரம் – பிரேம்குமார், மொடக்குறிச்சி – கிருத்திகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
தனி ஆளாக பரப்புரை செய்யும் தவெக வேட்பாளர்

திருத்தணி தவெக வேட்பாளரான வழக்கறிஞர் சத்திய குமார் தனி ஆளாக பரப்புரை மேற்கொண்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரை வேட்பாளராக அறிவித்ததற்கு தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடத்திய நிலையில், இன்று ஒருவர் கூட பரப்புரை செய்ய வரவில்லையாம். சொந்த கட்சி நிர்வாகிகளே புறக்கணித்த நிலையில், தனி ஒருவராக வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார். <<-se>>#TNElection2026<<>>


