News February 1, 2025
Startup நிறுவனங்களுக்கு கடன் வழங்க முடிவு

புதிதாக தொழில் தொடங்குவோருக்கு ₹20 கோடி வரை கடன் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும், சிறு, குறு தொழில் உற்பத்தியை பெருக்க தேசிய உற்பத்தி இயக்கம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
நாமக்கல்லில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnmkdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க
News March 4, 2026
வங்கிக் கணக்கில் பணம்.. உடனே செக் பண்ணுங்க

PM KISAN திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2,000 விரைவில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் பயனாளிகளின் விவரங்கள் மாறியிருந்தால் அடுத்த தவணையை பெற முடியாது. எனவே, உங்கள் விவசாய அடையாள அட்டையில் எண்ணில் உள்ள ஆதார் எண், புதிய வங்கிக் கணக்கு, மாற்றப்பட்ட முகவரி என ஏதேனும் மாறியிருக்கிறதா என செக் செய்யவும். மாற்றமிருப்பின், வேளாண் அலுவலகத்திற்குச் சென்று மாற்றிக் கொள்ளுங்கள்.
News March 4, 2026
ஈரானின் உயர் தலைவரே டார்கெட்: இஸ்ரேல் எச்சரிக்கை

ஈரானின் உயர் தலைவராக யார் வந்தாலும் அவரை காலி செய்வதுதான் எங்களது இலக்கு என இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் எச்சரித்துள்ளார். இந்த பணியை முடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என இஸ்ரேல் படைக்கு நெதன்யாகு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஈரானின் உயர் தலைவராக கமேனியின் மகன் முஜ்தபா கமேனி பதவியேற்றுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


