News February 17, 2025
கட்டணமில்லா பேருந்து சேவையை அதிகரிக்க முடிவு

மகளிருக்கான கட்டணமில்லா சேவை பஸ்களை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் பெண் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், கூடுதல் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வருவாய் குறைவான 174 மாநகர சிவப்பு நிற விரைவுப் பேருந்துகள், விடியல் பயணத் திட்டத்திற்கு மாற்றப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் 63% பெண்கள் பயணித்துள்ளனர். மாநிலம் முழுவதும் இந்த நடவடிக்கை விரிவுப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
Similar News
News March 4, 2026
ஓவர் ஸ்பீடு.. தோனிக்கே ஷாக்!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பைக்கில் வேகமாக சென்றதற்காக Ex. கேப்டன் தோனிக்கு ₹1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பைக் ஓட்டுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருக்கும் தோனி, தன்னுடைய வீட்டில் மிகப்பெரிய பைக் கலெக்ஷனே வைத்திருக்கிறார். தோனியாக இருந்தாலும் விதிமீறலுக்கு அபராதம் விதித்ததை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
News March 4, 2026
முதல்முறையாக இந்த Point-ஐ விஜய் பேசவில்லை..

இதுவரை நடந்த அனைத்து கூட்டங்களிலும், TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேசிவந்தார் விஜய். அத்துடன் தவெக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பலமுறை வாக்குறுதியும் கொடுத்துள்ளார். இந்நிலையில், முதல்முறையாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பாயிண்ட்டை தஞ்சை கூட்டத்தில் பேசாமல் ஸ்கிப் செய்திருக்கிறார் விஜய். இது ஏன் என பலரும் கேட்டு வருகின்றனர். உங்கள் கருத்து?
News March 4, 2026
CINEMA 360: தள்ளிப்போன டாக்ஸிக் ரிலீஸ்!

யஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ படத்தின் வெளியீடு ஜூன் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. GCC நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தின் காரணமாக தள்ளிவக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் *MR ராதாவிற்கு ‘ரத்தக்கண்ணீர்’, ராதிகாவுக்கு ‘தாய் கிழவி’ என நடிகர் சிவகுமார் புகழ்ந்துள்ளார் *’வா வாத்தியார்’ படம் ஏற்படுத்திய நஷ்டத்தால், தனது க்ரீன் சினிமாஸ் தியேட்டரை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விற்று விட்டாராம்


