News August 6, 2025
அதி நவீன ஏவுகணைகளை களமிறக்க முடிவு

ஆபரேஷன் சிந்தூரின் போது நமது பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால், இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிகளவில் ரஷ்யாவிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விவாதிக்க, பாதுகாப்பு அமைச்சக உயர்மட்ட குழு விரைவில் கூட உள்ளது. இந்தியா – ரஷ்யா கூட்டு தயாரிப்பில் இந்த ஏவுகணைகள் தயாரிக்கப்படுகின்றன.
Similar News
News March 6, 2026
UAN நம்பரை மறந்துட்டீங்களா? ஈசியா தெரிஞ்சிக்கும் வழி!

➥EPFO பக்கத்திற்கு செல்லவும் ➥Services-ஐ கிளிக் செய்து, ‘For employees’-ஐ தேர்ந்தெடுக்கவும் ➥Member UAN/Online Services-ஐ கிளிக் செய்து, பெயர், DOB, ஆதார் or பான் நம்பரை பதிவிடவும். ரெஜிஸ்டர் செய்துள்ள மொபைல் நம்பரை கொடுத்தால், OTP வரும். அதை பதிவிட்டு, submit-ஐ கிளிக் செய்யவும் ➥பின்னர், ‘Know your UAN’- ஐ தேர்ந்தெடுத்து, ‘Show my UAN’-ஐ கிளிக் செய்தால், உங்களின் UAN நம்பர் காட்டும்.
News March 6, 2026
கடன் வட்டி தள்ளுபடி.. அறிவித்தது தமிழக அரசு

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இந்த சலுகை இம்மாதம் 31 வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE
News March 6, 2026
₹20 லட்சம் வேணுமா? இதோ இருக்கு அசத்தல் திட்டம்

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ₹28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் 6.7% வட்டி சேர்த்து ₹20 லட்சத்தை பெறலாம். உங்களால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியவில்லை என்றால், தினமும் ₹50 செலுத்துங்கள். 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ₹1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை பெறலாம். இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள போஸ்ட் ஆபிஸை அணுகுங்கள். SHARE.


