News August 23, 2025
செப்.1-ல் முடிவு.. RB உதயகுமார் அறிவிப்பு

யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் பலகட்ட ஆலோசனைகள் இருக்கும். ஆனால், கூட்டணி அமைத்தபிறகு பல குழப்பங்களுக்குள் சிக்கியுள்ளது அதிமுக. காரணம், நேற்று வரை EPS பெயரைக் குறிப்பிடாமல் ‘கூட்டணி ஆட்சி’ தான் என்கிறார் அமித்ஷா. மறுபக்கம் CM நாற்காலியில் EPS-ஐ அமரவைக்க வேண்டும் என சொல்கிறார் அண்ணாமலை. இந்நிலையில், இதுகுறித்து கேட்டதற்கு, ‘செப்.1-ல் EPS பதிலளிப்பார்’ என முடித்துவிட்டார் RB உதயகுமார்.
Similar News
News August 23, 2025
திமுகவின் வேரை அசைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி

திமுகவின் வேர் எங்கே இருக்கிறது என்பது கூட அமித்ஷாவுக்கு தெரியாது என அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். வரும் தேர்தலில் திமுகவை காணாமல் போக செய்ய வேண்டும் என நெல்லையில் நேற்று நடந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியிருந்தார். இதுகுறித்து பேசிய ரகுபதி, ஆழமாக பாய்ந்துள்ள திமுகவின் வேரை அமித் ஷா மட்டுமல்ல, யாராலும் அழிக்க முடியாது என்றார். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
News August 23, 2025
தமிழிசை மீண்டும் கவர்னர் ஆகிறார்?

இல. கணேசன் மறைவு, சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தை சேர்ந்த கவர்னரே இல்லை என்ற நிலை உருவானது. இதனால், ஹெச்.ராஜா கவர்னராக வாய்ப்புள்ளது என தகவல் வெளியானது. இந்த பட்டியலில் ஏற்கெனவே கவர்னராக இருந்த தமிழிசையும் இருக்கிறாராம். இதற்காகவே அவர் அண்மையில் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் பரிசீலனையில் உள்ளனராம்.
News August 23, 2025
இன்று மதியம் 2 மணிக்கு மேல்.. அலர்ட்.. அலர்ட்..

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (மதியத்திற்கு மேல்) கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.