News December 2, 2024
டிசம்பர் 2 வரலாற்றில் இன்று!

➤1697 – லண்டனில் புனித பவுல் பேராலயம் திறக்கப்பட்டது. ➤1859 – அடிமை ஒழிப்பு போராளி ஜான் பிரவுன் வர்ஜீனியாவில் தூக்கிலிடப்பட்டார். ➤1947 – பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்கும் ஐநா திட்டம் அறிவிக்கப்பட்டது. ➤1971 – அபுதாபி, துபாய் உள்ளிட்ட 6 நாடுகள் UAE என்ற பெயரில் இணைந்தன. ➤1988 – பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் பிரதமரானார். ➤2002 – இலங்கை அரசு – புலிகள் இடையிலான ஒஸ்லோ பேச்சுவார்த்தை தொடங்கியது.
Similar News
News September 9, 2025
ITR தாக்கல் செய்ய கடைசி நாளில் முட்டி மோத வேண்டாம்!

2025-ம் ஆண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்ய செப்.15 கடைசி நாளாகும். தாமதமாக தாக்கல் செய்தால், வட்டி, ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதம் போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும். கடைசி நாளில் பார்த்துக் கொள்ளலாம் என அலட்சியமாக இருந்து, போர்ட்டர் சுமையால் பலராலும் தாக்கல் செய்ய முடியாமல் போகலாம். ஒரு வாரமே இருப்பதால் முன்கூட்டியே திட்டமிடுங்கள். SHARE IT.
News September 9, 2025
ஆசிய கோப்பை போட்டிகளை எப்படி பார்ப்பது?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது. போட்டியை எப்படி பார்ப்பது என பலருக்கும் சந்தேகம் இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை சோனி குழுமம்தான் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளது. அனைத்து போட்டிகளும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பாகும். மேலும், சோனி லைவ் ஆப், இணையதளத்திலும் பார்க்கலாம். சப்ஸ்கிரிப்ஷன் செய்வது அவசியம். SHARE IT.
News September 9, 2025
விஷம் கொடுத்து எனக்கு நல்லது செய்ய வேண்டும்: நடிகர் தர்ஷன்

தனது ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில், கன்னட நடிகர் தர்ஷன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது பேசிய தர்ஷன், சூரிய வெளிச்சத்தை பார்த்தே நீண்ட நாள்கள் ஆவதாகவும், சிறையில் சொல்லொண்ணா துயரங்களை அனுபவிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், நீதிபதி தனக்கு விஷம் கொடுத்து இந்த துயரத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.