News December 27, 2024

டிச 27: வரலாற்றில் இன்று

image

1822: ரேபிஸ் தடுப்பூசியை கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்டர் பிறப்பு
1939 – துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 32,700 பேர் உயிரிழந்தனர்.
1945: சர்வதேச நாணய நிதியத்தை நிறுவுதல்
1965: பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிறப்பு
1968 – சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 வெற்றிகரமாக பசிபிக் கடலில் இறங்கியது.
2007: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை

Similar News

News February 8, 2025

டெல்லியின் அடுத்த முதல்வர் இவர்தான்?

image

27 ஆண்டுகளுக்குப் பின் டெல்லியில் ஆட்சியை பிடித்திருக்கும் பாஜகவின் பர்வேஷ் வர்மா அடுத்த முதல்வர் ஆக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவின் வெற்றி செய்தி கிடைத்த கையோடு அவர் அமித் ஷாவை நேரில் சந்தித்திருக்கிறார். டெல்லி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகனான இவர், களத்தில் கெஜ்ரிவாலை எதிர்த்து பல மேடைகளில் முழங்கி, நேரடியாக அவரது சொந்த தொகுதியிலேயே வீழ்த்தியிருக்கிறார்.

News February 8, 2025

ஈரோடு இடைத்தேர்தல்: வாய்ப்பை தவறவிட்ட அதிமுக

image

இடைத்தேர்தல் என்றாலே, ஆளுங்கட்சி முழு அதிகார- பண பலத்துடன் இறங்குவது வழக்கம் தான். அதற்காக தேர்தலையே அதிமுக புறக்கணித்தது, நல்ல சந்தர்ப்பத்தை தவறவிட்டதாகவே தோன்றுகிறது. வெற்றிக்கு வாய்ப்பில்லை என்றாலும், ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தவும், எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கே பெற்று, திமுக அரசு மீது மக்களுக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் பயன்படுத்தி இருக்கலாம். உங்க கருத்து?

News February 8, 2025

மீண்டும் தந்தையானார் ஆஸி. கேப்டன்

image

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அவரின் மனைவி, இன்ஸ்டாவில் குழந்தையின் போட்டோவையும் வெளியிட்டுள்ளார். இவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதே நேரத்தில், வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கம்மின்ஸ் விளையாடுவது கேள்விக்குறியாகி இருக்கிறது. அவர் காயம் காரணமாக தற்போது நடைபெறும் இலங்கைக்கு எதிரான தொடரிலும் பங்கேற்கவில்லை.

error: Content is protected !!