News June 23, 2024
விஷச்சாராய பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, 100க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கவலைக்கிடமாக இருந்த பலரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 33 பேரும், சேலம் மருத்துவமனையில் 17 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
Similar News
News November 16, 2025
BREAKING: இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சி

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 159 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியா 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 30 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா 153 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 124 ரன்கள் என்ற டார்கெட்டுடன் களமிறங்கிய இந்திய அணி 93 ரன்களிலேயே பரிதாபமாக ஆல் அவுட் ஆனது.
News November 16, 2025
வரலாறு காணாத விலை உயர்வு.. புதிய உச்சம்

முட்டை விலை 50 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று மொத்த கொள்முதல் விலையில் 5 காசுகள் உயர்ந்து ₹5.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ₹6.50 முதல் ₹7 வரை விற்பனையாகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி முட்டை ₹5.90-க்கு விற்பனையானதே உச்சமாக இருந்தது.
News November 16, 2025
தேசிய பத்திரிகை தினம்: ஸ்டாலின் வாழ்த்து

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி, பத்திரிகையாளர்களுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக பத்திரிகைகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பாஜக அரசின் தோல்விகள், ஊழல்கள், வஞ்சகத்தை துணிச்சலுடன் வெளிப்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு பாராட்டுகள் என்றும் அவர் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். <<-se>>#Nationalpressday<<>>


